என்னை தொட்டவர்கள் !

27 ஆகஸ்ட், 2014

''நஷீஹத் கமெண்ட் 005''

கேரளா கவர்னர் ஷீலா ராஜினாமா:
**************************************** 
சோனியா காந்தி ஒரு பெண் ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்று பிரதிபா பாட்டிலை நியமித்தார்.
இந்தியாவின் முதல் ஜனாதிபதி என்ற பெயர் பெற்ற ஜனாதிபதி,  சுற்றுபயணம் என்ற பெயரில் அதிகமான பணம் விரையம் செய்த இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெயர் பெற்றதை இந்த நாடு மறக்கவில்லை .
இப்போது 15 வருடம் டில்லி முதல்வராக இருந்த ஷீலா, அவரின் நல்லாட்சிக்கு கிடைத்த பரிசாக டில்லி தேர்தலில் படு தோல்வி அடைந்தார்.உடனே அவரை கௌரவ படுத்த காங்கிரஸ் கேரளா கவர்னராக நியமித்தது அதுவும் இப்போது நிலைக்கவில்லை. காரணம், ஆட்சி மாறியது காட்சியும் மாறிவிட்டது

19 ஆகஸ்ட், 2014

'' நஷீஹத் கமெண்ட்'' 004

இலங்கையில் 400 ஆண்டு பழமையான பள்ளிவாசல் இடித்து தரைமட்டம் இலங்கை ராணுவம் அட்டூழியம்
(சன் நியூஸ்)
*******************************************
100 கோடிக்கு மக்களுக்கு மேல் இருக்கும் ஜனநாயக நாடு இந்தியாவிலேயே பாபர் மசூதிக்கு நியாயம் கிடைக்கவில்லை
பேயும் ,பெருச்சாளியும் ஆட்சிசெய்யும் சுண்டக்கா நாட்டை சொல்லவா வேண்டும் துஆ செய்வோம் அல்லாஹ் போதுமானவன் (கலீல்) .                                   

17 ஆகஸ்ட், 2014

"நஷீஹத் கமெண்ட்" 003

கேரள மாநிலம் கொல்லத்தில் டி.கே.எம். சென்டினரி பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியின் நிர்வாகிகள் கூறியதாவது:
சுதந்திர தினத்தன்று, பள்ளியில் ‘வந்தே மாதரம்' பாடலுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ‘சோஷி யல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா' (எஸ்.டி.பி.ஐ) என்ற அடிப் படைவாத அமைப்பு கடிதம் எழுதி யிருந்தது. அவ்வாறு செய்யாவிட் டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அந்தக் கடிதத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதனால் ‘வந்தே மாதரம்' பாடலை பாடத் தடைவிதித்தோம் என்றும் அந்தப் பள்ளி கூறியது.
                 ******************************************************* 
தாய்நாட்டை வணங்குவது வேறு மதிப்பது வேறு ,எங்கள் சமுதாயம் மதிக்குமே தவிர ஒருபோதும் வணங்காது
படைத்தவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன் .இதில் எந்த மாற்றமும் இல்லை (கலீல்)

16 ஆகஸ்ட், 2014

'' நஷீஹத் கமெண்ட் '' 002


                       இந்தியாவின் 68-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி குண்டு துளைக்காத மேடையை தவிர்த்துவிட்டு சாதாரண மேடையில் நின்று சுதந்திர தின உரையாற்றியதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
 
 ரகசியமாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவிட்டால் முட்டு சந்தானாலும், வெட்ட வெளியானாலும் பிரதமர் பேசலாம் இதில் ஆச்சரிய படுவதற்கு ஒரு வெங்காயமும் இல்லை (கலீல்)

'' நஷீஹத் கமெண்ட் '' 001

முதல்வர் 110 வது விதியின் படி இதுவரை 30,000 ஆயிரம் கோடிக்கு திட்டங்களை அறிவித்து இருக்கிறார்.

 இரண்டு ஆண்டுகளாக புதிய ரேசன் கார்டு வழங்க படவில்லை, தேர்தல் வாக்குறுதியான 60 வயது முதியவர்களுக்கு இலவச பஸ் பயணம் நடைமுறை படுத்தவில்லை இவற்றையும் விதி 110 ல் சேர்க்க வழி எதுவும் உள்ளதா? (கலீல்)