என்னை தொட்டவர்கள் !

30 ஜனவரி, 2012

முஸ்லிம்களைப் பற்றி இனி துவேஷமாக எழுதமாட்டேன்: சு.சாமி! Read more about முஸ்லிம்களைப் பற்றி இனி துவேஷமாக எழுதமாட்டேன்: சு.சாமி!


"இனிமேல் முஸ்லிம்கள் குறித்து துவேஷமாக எதுவும் எழுத மாட்டேன்" என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சாமி எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தைக் கொடுத்துள்ளார்.
"முன்னர் முஸ்லிம்களின் வாக்குரிமையைப் பறிக்கவேண்டும்" என்று அவர் எழுதியிருந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் பிணை கேட்டு விண்ணப்பித்திருந்தார். இவ்வாறு அவர் எழுதிக்கொடுத்ததால், அவருக்குப் பிணை வழங்கப்பட்டது.

"இந்தியாவில் வசிக்கும் முஸ்லீம்களின் வாக்குரிமையைப் பறிக்க வேண்டும்" என்பது உள்ளிட்ட பல்வேறு துவேஷக் கருத்துக்களுடன் கூடிய கட்டுரையை  முன்பு சுப்ரமணிய சாமி எழுதியிருந்தார். இதற்கு  இந்திய முஸ்லிம்களிடையே  கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும், சு.சாமியின் மதத்துவேஷம் காரணமாக, தனது பல்கலைகழகத்தில் பாடம் எடுப்பதற்கும் ஹார்வர்ட் பல்கலைகழகம் தடை விதித்தது. துவேஷக் கருத்து எழுதியதால் சாமி மீது டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.

இவ்வழக்கில் சுப்ரமணிய சாமி பிணை கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகினார்.  நீதிபதி முன்பாக இனிமேல் இதுபோன்ற கட்டுரைகளை எழுத மாட்டேன் என்று சாமி எழுதிக் கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து அவருக்குப் பிணை வழங்கிய நீதிபதி, "கைது செய்யப்பட்டால் ரூ. 25,000 அபராதம் செலுத்தி பிணையில் வெளிவரலாம்" என்று அவருடைய மனுமீது தீர்ப்பு கூறினார்.

22 ஜனவரி, 2012

அதிக குழந்தை பெறுங்கள்: சிங்கப்பூர் பிரதமர்!



சிங்கப்பூர் பிரதமர்

 "சிங்கப்பூர் நாட்டினர் அதிக குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டும்" என்று  அந்நாட்டின் பிரதமர்                                      லீ சியன் லூங் கேட்டு கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சிங்கப்பூரில் தம்பதியர் அதிக பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள ஊக்குவிக்கும் சமூகச் சூழலையும் மனப்போக்கையும் சேர்ந்து செயல்பட்டு உருவாக்க முன்வருமாறு" சிங்கப்பூராருக்கு பிரதமர் லீ சியன் லூங் அறை கூவல் விடுத்து இருக்கிறார்.

"தம்பதியர் அதிக பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள மேன்மேலும் நிதி ஊக்குவிப்புகள் பலன் தராது" என்று தெரிவித்துள்ள அவர், "சிங்கப்பூரின் எதிர் காலத்தில் தம்பதியருக்கு அதிக நம்பிக்கை ஏற்படச் செய்வதே அதற்கான ஊக்குவிப்பாக இருக்கும்" என்றார்.

"இந்த தேசிய முயற்சியில் எல்லாரும் சேர்ந்து நமக்கும் நம் குடும்பங்களுக்கும் பிள்ளைகளுக்கும் தலைசிறந்த தாயகமாகச் சிங்கப்பூரை ஆக்குவோம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தப்லீக் ஜமாஅத்தை சார்ந்தவர்கள் இலங்கையிலிருந்து வெளியேற உத்தரவு


இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கு இஸ்லாம் குறித்த போதனைகளை நடத்துவதற்கு வந்த 161 வெளிநாட்டு முஸ்லிம்களை, விசா விதிமுறைகளை மீறியதாக கூறி நாட்டைவிட்டு வெளியேறுமாறு இலங்கை குடியகல்வு கட்டுப்பாடகம்  உத்தரவு பிரப்பித்துள்ளது.
இவர்களுக்கு வழங்கப் பட்ட விசா, சுற்றுலா பயணிகளாக இலங்கைக்கு வருவதற்காக வழங்கப் படும் விசிட் விசா, ஆனால் இவர்கள் விதிமுறைகளை மீறி சுற்றுலா அல்லாத செயலில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டி இவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து இலங்கை குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்தா பெரேரா கூறுகையில், "இவர்கள் வெவ்வேறு குழுக்களாக,  பெரும்பாலும் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலத்தீவு மற்றும் சில அரபுநாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் நாட்டின் பல பாகங்களிலும் அவர்கள் இஸ்லாமிய போதனைகளை நடத்தியதாகவும், அவர்களின் தொடர்பு விபரங்கள் எம்மிடமுள்ளன. அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து நாம் ஏற்கெனவே அவர்களுக்கு அறிவித்துள்ளோம் " என அவர் தெரிவித்தார்.
ஆனால் மேல் மாகாண ஆளுநர் அலவி மவுலானா கருத்து தெரிவிக்கையில்,"இக்குழுவினர் இலங்கையில் இருப்பது தமக்குத் தெரியும், இவர்கள் அரசியல் நோக்கம் அற்ற தீங்கற்றவர்கள்" என கூறினார்.
இதற்க்கிடையே,தப்லீக் ஜமாஅத் அதிகாரிகள் கூறுகயில்,"இக் குழுவினர் தமது சொந்தப் பணத்தையே அவர்களின் நோக்கங்களுக்கு பயன்படுத்துவதாகவும்,  விசா ரத்துச்செய்யப்பட்டமைக்கு காரணம் தெரியவில்லை எனவும், குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரை, சிரேஷ்ட அமைச்சரான ஏ.எச்.எம். பௌஸி விரைவில் சந்திப்பார் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.