என்னை தொட்டவர்கள் !

30 டிசம்பர், 2012

சவூதி : மாபெரும் பொது மன்னிப்பு - மன்னர் அறிவிப்பு!


கடுமையான தண்டனைகளுக்குப் பெயர் பெற்ற நாடான சவூதி அரேபியாவில் சிறையில் வாடும் குற்றவாளிகளுக்கு மன்னர் பொதுமன்னிப்பு அளித்துள்ளார். பொது உரிமை மீறல் குற்றத்தின் கீழ் சிறையில் வாடுபவர்களுக்கும், நிதிக்குற்றங்களுக்காக சிறைப்பட்டு, திவாலாகிப் போனவர்களுக்கும் அவர்தம்
குடும்ப நலனை கருத்தில் கொண்டு, அனைவருக்கும் பொதுமன்னிப்பு அளிக்கப்படுவதாக சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அறிவித்துள்ளதாக சவூதி செய்தி முகவம் தெரிவித்துள்ளது.

அதே சமயம், தனியுரிமை மீறல் குற்றம் புரிந்தவர்களுக்கும், பெரிய குற்றங்களான கொலை, வன்புணர்வு உள்ளிட்ட குற்றவாளிகளுக்கும் இந்தப் பொதுமன்னிப்பு பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபிய நாடு இஸ்லாமிய மதநெறிப்படி ஷரீயத் சட்டத்தைப் பின்பற்றி வருகிறது. அச்சட்டப்படி, பொது உரிமைக் குற்றங்கள் , தனியுரிமைக்   குற்றங்கள் என்று இருவகையாக குற்றங்கள் பகுக்கப்படுகின்றன. தனிமனிதருக்கு இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு பாதிக்கப்பட்டவரே  மன்னிக்கத் தகுதியானவர் என்பதால் அத்தகு குற்றங்கள் இந்த பொதுமன்னிப்பின் கீழ் வராது  என்றும் கூறப்பட்டுள்ளது.

காட்டாக, போக்குவரத்துக் குற்றங்களில் அரசு சார்பில் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டாலும், அக்குற்றத்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு உரிய நட்ட ஈடு வழங்கப்படவேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பொதுமன்னிப்பு அடைந்த கைதிகள் இதனை படிப்பினையாகக் கொண்டு  குற்றங் களைந்தவர்களாக தேசத்திற்கும், பண்பாட்டிற்கும்  இனி பாடுபட முன்வர வேண்டும்  என்று இளவரசர் முஹம்மது கேட்டுக்கொண்டுள்ளார்.

25 நவம்பர், 2012

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பர்தா அணிந்து உரை!


Sumaiya Karim, wearing hijab speaks in British Parliament




பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் அணிந்து உரையாற்றிய மாணவி அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளார்.
பிரிட்டிஷ் நாடு தேர்தல் ஜனநாயகத்தின் தாயகம் என்று அழைக்கப்படுகிறது. இந்நாட்டில், மாணவர்கள், இளைஞர்களிடையே ஜனநாயக ஆர்வத்தைத் தூண்டவும், நாடாளுமன்ற நடவடிக்கைகளில்  இளைஞர்களின் பிரச்னைகள் குறித்து உரையாற்றவும்  தேர்ந்தெடுக்கப்படும் சில இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதுண்டு.

இளைஞர் நாடாளுமன்றம் என்றழைக்கப்படும் இந்நிகழ்வுகளில் 11 வயது முதல் 18 வயது வரையிலான இளைஞர்கள் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
அவ்வகையில், மேற்கு லண்டனில் உள்ள வோக்கிங்காம் பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுமையா கரீம் என்கிற 16 வயது மாணவி பிரித்தானிய இளைஞர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய விதம் அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தலை மற்றும் கழுத்தை மறைக்கும் வகையிலான இஸ்லாமியர்களின் பாரம்பரிய உடையான ஹிஜாப் (பர்தா) அணிந்த வண்ணமே மாணவி  சுமையா உரை நிகழ்த்தினார். இதன்மூலம் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில், ஹிஜாப் அணிந்து  உரையாற்றிய முதல் பெண்ணாக சுமையா திகழ்கிறார்.

22 நவம்பர், 2012

கசாப் தூக்கு-இந்தியாவுக்கு தலிபான் எச்சரிக்கை!


மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி கசாப்புக்கு புதன் அன்று தூக்குத் தண்டனை நிறைவேறியது.
இந்நிலையில் அஜ்மல் கசாப்பின் உடலை தங்கள் வசமோ அல்லது அவரது உறவினர்களிடமோ ஒப்படைக்க வேண்டும் என்று, தலிபான் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த கோரிக்கை மறுக்கப் பட்டால் இந்தியர்களை அதுபோல் பிடித்துக் கொலை செய்வதோடு, அவர்களின் உடல்களையும் நாங்கள் தரமாட்டோம் என்று தலிபான் எச்சரித்துள்ளது.
தலிபான் இயக்க செய்தித் தொடர்பாளர் இசானுல்லா, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

23 அக்டோபர், 2012

நியூஸ் பிளஸ் :031

நியூஸ்:
               மின்சாரம் இல்லை என்று சொல்ல  மின்சாரதுறை அமைச்சர்             எதற்கு?                                                                                  -விஜயகாந்த் 


              சட்டசபைக்கு செல்லாமல் எதிர்கச்சி தலைவர் பதவி எதற்கு ?                                                                                                                      
                                                                                                     -தினமலர்                            பிளஸ்:
                 செய்தித்தாள் என்றால் தலையங்கம் வேண்டும் , அதை எழுதமுடியவில்லை என்றால் செய்தித்தாள் எதற்கு?      
                                                                                                      - நஷீஹத்              

11 அக்டோபர், 2012

நியூஸ் பிளஸ் :030

நியூஸ் : சென்னையில் மட்டும் 1 மணி நேரம் பவர் கட் 


பிளஸ் : அங்க மட்டும் தான் மனிதர்கள் இருக்கார்களோ ?

நியூஸ் பிளஸ்:029

நியூஸ்: வீணையின் நரம்புகளை போல் சபாநாயகர் செயல்படவேண்டும் :ஜெ 


பிளஸ்: அவர் நரம்பாகத்தான் இருப்பார் ,மீட்டுவது யாரோ?

9 அக்டோபர், 2012

நியூஸ் பிளஸ் :28

நியூஸ்: ஐந்தாண்டுகளில் 24 மணி நேர மின்சாரம் : பிரதமர் 


பிளஸ்: இவரு மட்டும் பதவியில் இருக்க மாட்டார் 

நியூஸ் பிளஸ்: 27



நியூஸ்: தி.மு.க. , அ.தி.மு.க.,காங்கிரஸ்  எல்லாமே பிராட் : விஜயகாந்த் 


பிளஸ்: இவர் மட்டும் நல்லவருன்னு இவரு மனைவி சொல்வாங்க 

நியூஸ் பிளஸ் 26

நியூஸ்: பெட்ரோல் விலை 56 காசு குறைவு : செய்தி 

பிளஸ்: முழம்  ஏறினால் ஜான் சறுக்கும் 

3 அக்டோபர், 2012

நியூஸ் பிளஸ் :025

நியூஸ் பிளஸ் : இலங்கை தமிழர் விவகாரம் பிரதமர் கருனாநிதிக்கு கடிதம் 

பிளஸ் : இப்படியே கடிதம் எழுதியே காலத்தை போக்குங்கள் , உங்களுக்கு ஆட்சியும் முடிந்துவிடும் , இலங்கை தமிழனுக்கு ஆயுளும் முடிந்துவிடும் 

நியூஸ் பிளஸ்: 024

நியூஸ் பிளஸ்:  தவறு ! தவறு ! தவறு! தினமணி தலையங்கம் 

பிளஸ்:  இந்த தலையில்லாத தலையங்கத்தால் தினமணி ஆசிரியர் தனது தகுதியை இழக்கிறார் ,அறிவு இல்லை என்பதையும் நிருபிக்கின்றார் .

24 செப்டம்பர், 2012

நியூஸ் பிளஸ் 023

நியூஸ்: கொழும்பில் அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது 

பிளஸ்: முஸ்லீம்ஸ்னா சும்மா அதிரும்டா .....

7 செப்டம்பர், 2012

நியூஸ் பிளஸ் 022

நியூஸ்: பெட்ரோல் விலை உயராது :அமைச்சர் 

பிளஸ்: என்ன சொல்றீங்க.....கேக்கல .......

6 செப்டம்பர், 2012

நியூஸ் பிளஸ் 021

நியூஸ்: அழகிரி ,சிதம்பரம் சொத்து மதிப்பு ஒரேஆண்டில் கடும் உயர்வு !


பிளஸ்: அவங்க தொழிலே முழுநேர அரசியல்தானே 

நியூஸ் பிளஸ் 020

நியூஸ்: இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி !


பிளஸ்: முதல்ல சீனாவிடம் இருந்து அருணாச்சல பிரதேசத்தை காப்பாத்துங்கப்பா ......

நியூஸ் பிளஸ் 019

நியூஸ்: பிரதமரை மட்டமாக எழுதிய அமெரிக்க பத்திரிக்கைக்கு இந்தியா கண்டனம் 

பிளஸ்: உண்மையை சொன்னதற்கு கண்டனம் தெரிவிக்கும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் ,இப்போது அமெரிக்க பத்திரிகை இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டு தனது சுய மரியாதையை கெடுத்து கொண்டது 

4 செப்டம்பர், 2012

நியூஸ் பிளஸ் 018

நியூஸ்: கருணாநிதி ,ஜெயலலிதா காலத்தை வென்றவர்கள் :ரஜினி 

பிளஸ்: ரஜினி ஒரு சந்தர்ப்பவாதி , 

3 செப்டம்பர், 2012

நியூஸ் பிளஸ் 017

நியூஸ்: இலங்கை தமிழர் பிரச்சினையில் மனசாட்சிபடி செயல்புரிந்தேன் :கருணாநிதி 

பிளஸ்: வயசான காலத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கமுடியாது.

நியூஸ் பிளஸ் 016

நியூஸ்: பிரதமர் கட்டாயம் பதவி விலகியே தீரவேண்டும் :பி ஜே பி 

பிளஸ் : பிரதமர் சீட்டை கிழிக்க ஆனாலும் இவ்வளவு கொலைவெறி இருக்ககூடாது 

நியூஸ் பிளஸ் 015

நியூஸ்: ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு ஆனால் போராட்டம் இல்லை :கருணாநிதி 

பிளஸ்: கோபம் வரும்ம்ம் ....ஆனா வராது .

31 ஆகஸ்ட், 2012

நியூஸ் பிளஸ் 014

நியூஸ்: அமெரிக்காவில் துப்பாக்கி சூடு : 3 பேர் பலி 


பிளஸ்: அமெரிக்கா மனநோயாளிகளின் வல்லரசு என்பது பலருக்கு தெரியாத உண்மை 

நியூஸ் பிளஸ் 013

நியூஸ்: பதவி விலகபோவதில்லை :பிரதமர் 

பிளஸ்: ஊழல் எல்லாம் கிடையாதாம் ,கணக்கு பார்த்ததுதான் தவறாம் ,அதனால ஆடிட்டர் தான் பதவி விலகனுமாம்  

30 ஆகஸ்ட், 2012

நியூஸ் பிளஸ் 012

நியூஸ் : குஜராத் கலவரத்துக்காக மன்னிப்பு கேட்கமாட்டேன் :மோடி 

பிளஸ்: பாதிக்க பட்டவர்கள் இவரை என்றைக்குமே மன்னிக்க தயாராக இல்லை என்பது தான் உண்மை 

29 ஆகஸ்ட், 2012

நியூஸ் பிளஸ் 011

நியூஸ்: பதினான்கு வயதுக்கு உட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தினால் மூன்று ஆண்டு சிறை :செய்தி 

பிளஸ்: ஆனால் சினிமா ,டிவி சீரியல் போன்றவைகளில் மட்டும் நடிக்கலாம் 
                அரசாங்கம் கண்ணை மூடிக்கொள்ளும் 

நியூஸ் பிளஸ் 010

நியூஸ்: பிரதமர் ஈரான் பயணம் 

பிளஸ்: அங்க போயாவது பேசுங்க 

நியூஸ் பிளஸ் 009

நியூஸ்: அவதூறு வழக்கு போடா தயார? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கேள்வி 

பிளஸ்: இவங்க விளையாட கோர்ட்டுதான்  கிடச்சதா ?

28 ஆகஸ்ட், 2012

நியூஸ் பிளஸ் 008

நியூஸ்: மணல் கொள்ளையை மக்கள் தான் தடுக்க வேண்டும் : விஜயகாந்த்

பிளஸ்: அப்போ ஒங்களுக்கு ஏன் வோட்டு போடணும் ?

27 ஆகஸ்ட், 2012

நியூஸ் பிளஸ் 007

நியூஸ்: ஆயிரம் வார்த்தையை விட மௌனம் மேலானது : மன்மோகன் 


பிளஸ்: பிரதமராக இருந்துகொண்டு மௌனமாக இருபதைவிட ராஜினாமா செய்வது மேலானது 

நியூஸ் பிளஸ் 006

நியூஸ்: மன்மோகன் ,சோனியா வீடு அண்ணா ஹசாரே குழுவினரால் முற்றுகை 


பிளஸ்: அண்ணா ஹசாரே காந்தியும் இல்லை , சோனியா , மன்மோகன் வெள்ளையரும் இல்லை 

நியூஸ் பிளஸ் 005

நியூஸ் : எம். ஜி. ஆர். சமாதி 7 1/2  கோடியில் மாற்றி அமைப்பு 

பிளஸ் : இடியும் நிலையில் அரசு அலுவலகம் ,பள்ளி கூடம் இருக்கிறது ,ஆபத்தான நிலையில் அரசு பேருந்து இருக்கிறது , பொருளாதார நெருக்கடியால் ரேசன் கார்டு வழங்கப்படவில்லை இந்த நிலையில் சமாதியை புதுபிப்பது ரொம்போ ......முக்கியமோ? 

26 ஆகஸ்ட், 2012

நியூஸ் பிளஸ் 004

நியூஸ் சக்தி வாய்ந்த பெண்மணி - ஆறாவது இடத்தில் சோனியா காந்தி


பிளஸ்:  சரிதானுங்க   ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் எல்லாம் இவங்க சொல்றததான் கேக்குறாங்க  

நியூஸ் பிளஸ் 003

நியூஸ்: ஆசிரியர் தகுதி தேர்வில் ஒரு சதவீதமே தேர்ச்சி 

பிளஸ்: கற்றுகொடுப்பவர்கள் தகுதி இப்படி என்றால் இவர்களிடம் படிக்கும் மாணவர்கள் நிலை பரிதாபம் தான் ! ஆனால் இவர்கள் முயற்சியை பாராட்டலாம் 

நியூஸ் பிளஸ் 002

நியூஸ்: கிரனைட் அதிபர் மதுரையில் கைது 

பிளஸ்: கடந்த ஐந்தாண்டு ஆட்ச்சியில் இவர் இருந்த இடமே பலருக்கு தெரியாது 

நியூஸ் பிளஸ் 001

நியூஸ்: பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி ஆனார் 

பிளஸ்: இந்தமுறை  சோனியாவுக்கு பெண் ஜனாதிபதி கிடைக்க வில்லை போலும் ,பழைய ஜனாதிபதி மேல் அதிருப்தி இருப்பதுதான் காரணமோ ?

2 ஆகஸ்ட், 2012

ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கியதில்லை - ஜவாஹிருல்லாஹ் பேட்டி


                                                                                          
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லாஹ் அண்மையில் சவூதி அரேபியா தலைநகர் ரியாத்துக்கு  வந்திருந்தார். அவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோது, ஏற்பாட்டாளர்கள் மூலம் வினவியபோது, மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார்.

வாக்களிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக மேலும் பல மணித்துளிகள் நேர்காணல் நீடித்த போதும் எவ்வித சங்கடத்தையும் வெளிக்காட்டாமல் மிகுந்த பொறுமையுடனும் இன்முகத்துடனும் அரசியல் முதிர்ச்சியுடனும் ஜவாஹிருல்லாஹ் விடையளித்த பாங்கு பாராட்டிற்குரிய ஒன்று.

தேர்தலுக்குப் பின் அரசியல் ரீதியான அவரின் நிலைப்பாடுகள், சமுதாயம் குறித்து அவர் எடுத்து செல்லும் நடவடிக்கைகள், சட்டசபை தொடர்பானவை, இயக்கம் தொடர்பானவை என்று தொலைநோக்கில் நாம் கேட்க  நினைத்தவையும் அவரின் விளக்கங்களும் பரவலாய் விரிகின்றது.

அவருடனான  நேர்காணல் -

கேள்வி: இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளாக எதைக் கருதுகிறீர்கள்? அதை எவ்வாறு தீர்க்கலாம்?

ஜவாஹிருல்லாஹ்: இந்திய அளவில் முஸ்லிம்களிடையே கல்வியறிவின்மை, வறுமை, அரசியல் விழிப்புணர்வின்மை, ஒருங்கிணைந்த அரசியல் தலைமை இல்லாதது ஆகிய பிரச்னைகளைக் குறிப்பிடலாம். முஸ்லிம்கள் அதிகம் வாழும் பீகார், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் முதலிய மாநிலங்களில் வறுமை தலைவிரித்தாடுகின்றது.  அரசியல் விழிப்புணர்வை அவர்களிடத்தில் ஏற்படுத்தவேண்டியது கட்டாயமாகிறது. மக்களை விழிப்பறிவுணர்வை எட்டச்செய்வதன் வாயிலாகவே இவற்றைத் தீர்க்கலாம்


கேள்வி:  மனிதநேய மக்கள் கட்சியை தேசிய அளவில் முன்னெடுத்துச் செல்லும் திட்டமுண்டா? மேலும், தேசிய தேர்தல்களில் முஸ்லிம் கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலைச் சந்திக்க வாய்ப்புகள் உள்ளதா?

ஜவாஹிருல்லாஹ்: “இல்லை; அதற்கான சாத்தியங்களில்லை, வட இந்திய முஸ்லிம்களுக்கும், தென்னிந்திய முஸ்லிம்களுக்கும் அடிப்படை மனநிலையில் பெரிதும் மாற்றங்கள் இருக்கின்றன. அவர்கள் (வட இந்திய முஸ்லிம்கள்) ஒரு தென்னிந்திய தலைமையை ஏற்றுக்கொள்வார்கள் என்று சொல்வதற்கில்லை. இருப்பினும் அவர்களிடையே அரசியல் விழிப்புணர்வு ஏற்பட தொடர்ந்து நாங்கள் பாடுபட்டு வருகிறோம். அங்கு பல்வேறு கூட்டங்களில் நான் பங்குக் கொண்டு பேசியுள்ளேன். சமீபத்தில் உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிப்பெற்ற பீஸ் கட்சி 2007ல் தமுமுக டெல்லியில் நடத்திய பேரணியினால் கவரப்பட்டு உருவாக்கப்பட்ட கட்சியாகும். எனவே நாங்கள் அங்கு எங்கள்கட்சியை கட்டமைக்காவிட்டாலும் முஸ்லிம்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்று வருகிறோம்.


கேள்வி: ஜெயலலிதா அரசை எவ்விதம் மதிப்பிடுகிறீர்கள்?

ஜவாஹிருல்லாஹ்: எதிராகச் சொல்வதற்கு பெரிதாக எதுவும் இல்லை; வக்ஃப் வாரியத்தின் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பலன் அளிப்பதற்கும், அதிகரிக்கப்பட்ட ஊதியத்தினால் ஏற்பட்ட ஊதிய வித்தியாசத் தொகையை அளிப்பதற்காகவும் சென்ற ஆண்டு ரூ3 கோடியை தமிழக அரசு வழங்கியது. இதே போல் இந்த ஆண்டு பள்ளிவாசல் பராமரிப்பு பணிகளுக்காக ரூ 3 கோடி அரசு வழங்கியுள்ளது. மாவட்டங்களில் இயங்கும் முஸ்லிம் மகளிர் குழுவிற்கு அரசின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. உலமாக்களின் உதவி தொகையை ரூ750லிருந்து ரூ 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் தேர்தல் பரப்புரையின் போது முஸ்லிம்களின் இடஒதுக்கீடு அளவு அதிகரிக்கப்படும் என்று அளித்த தேர்தல் வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றாதது வருத்தம் அளிக்கின்றது. அதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.


கேள்வி: குண்டுவெடிப்பு போன்ற வழக்குகளில் சிறைத்தண்டனைப் பெற்ற அப்பாவி முஸ்லிம் கைதிகள் பல்லாண்டுகளுக்குப் பின்னரும்  பிணை வழங்கப்படாமல் இருக்கிறார்களே?

ஜவாஹிருல்லாஹ்: முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில், அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, ஏழாண்டுகளுக்கு மேல் சிறைப்பட்டிருந்த கைதிகள் அனைவரையும் விடுவிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், ஏழாண்டுகளுக்கு மேல் சிறையில் வாடிய முஸ்லிம் கைதிகளை அப்போது  விடுவிக்கவில்லை. அதே நிலை இப்போதும் தொடர்கிறது.எங்கள் நிலைப்பாட்டின் படி, பத்தாண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த அனைத்து கைதிகளையும் மேலும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த சிறைக்கைதிகளையும் விடுவிக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறோம்.

கேள்வி: ஆளுங்கட்சிக்கு, குறிப்பாக முதல்வருக்கு அளவுக்கதிகமாகத் துதிபாடுவதாக உங்கள் மீது குற்றச்சாட்டு உள்ளதே. மேலும் தானே புயல் நேரத்தில் நீங்கள் சட்டமன்றத்தில் பேசுகையில் “தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்கள் துயர் நிவாரணம் பெற்றதன் பின்னால் மற்ற மாவட்ட மக்களும் ‘தானே புயல் தங்களைப் பாதித்திருக்கக் கூடாதா? என்று எண்ணத் தலைப்பட்டதாக”ச் சொல்லியிருந்தீர்கள், அதுபற்றி?

ஜவாஹிருல்லாஹ்: ஒவ்வொரு முதல்வருக்கும் ஒரு மனநிலை உண்டு. சிலர் விமர்சித்தால் அதை நேர்மறையாக எடுத்துக்கொண்டு செயல்படுவார்கள். இன்னும் சிலர் பாராட்டினால் மேலும் ஊக்கம் பெற்று நல்லபல திட்டங்களைச் செயற்படுத்துவார்கள். அவ்வகையில் நமது தற்போதைய முதல்வரைப் பாராட்டினால் மென்மேலும் ஊக்கம் பெற்று நல்ல பல திட்டப்பணிகளைத் தொடர்வார்.  இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அந்த வகையில் முதலில் பாராட்டிவிட்டு அதன்பின்பு வேண்டிய கோரிக்கைகளை வைக்கிறோம். ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால்…

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசு ஓராண்டு நிறைவடைந்தது தொடர்பாக சட்டப்பேரவையில் நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் நமது மாண்புமிகு முதல்வர் தொலைநோக்குத் திட்டம் 2023 என்று திட்டம் வகுத்திருப்பது இதே போல் தமிழக இளைஞர்களின் திறன் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருப்பது மிகவும் பாராட்டிற்குரியது. ஆனால் தமிழகத்தில் இளம் குடிக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அரசுக்கு வருமானம் வருகிறது என்ற ஒரே காரணத்திற்காக மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பது புத்திசாலித்தனமானது அல்ல. இது எதிர்காலத்தில் வலிமையான தமிழகம் என்ற கருத்தோட்டத்திற்கு இழுக்கு ஏற்படுத்திவிடும் என்று குறிப்பிட்டோம்..

மற்றபடி, தானே புயல் தொடர்பாக, நான் அப்படி பேசியது தவறுதான் என்று ஏற்றுக்கொள்கிறேன். நானும் மனிதன் தானே, அவ்வகையில் தவறிழைத்துவிட்டேன். இனி அவ்வாறு பேசமாட்டேன் என்றும் உறுதி அளிக்கிறேன்.நானும் எங்கள் கட்சி ஆம்பூர் உறுப்பினர் அஸ்லம் பாஷாவும் இதுவரை, ஒரு பைசா கூட இலஞ்சம் வாங்கியதில்லை;  இன்ஷா அல்லாஹ் இனிமேலும் வாங்க மாட்டோம் என்று உறுதி அளிக்கிறோம். இங்கே நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், ஒரு எம்.எல்.ஏ வாக நீங்கள் இலஞ்சம் கேட்கக் கூட வேண்டாம், எல்லா நலத்திட்டங்களிலும் எம்.எல்.ஏ பங்கு என்று அவர்களாகவே ஒரு தொகையை ஒதுக்கிவிடுகிறார்கள். நாங்கள் அதைக் கூட பெறுவதில்லை என்பதை இங்கே உங்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன்.

கேள்வி: பர்மிய முஸ்லிம்கள் மீது பெரும் வன்முறையும், இன அழிப்புப் படுகொலைகளும் நிகழ்த்தப்படுகின்ற வேளையில், நமது எந்த அமைப்புகளும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லையே? தமுமுக எந்தவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது.?

ஜவாஹிருல்லாஹ்: இன்ஷா அல்லாஹ், விரைவில் இது பற்றி ஆலோசித்து, எங்களால் இயன்றதைச் செய்வோம்

கேள்வி: கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப் பின்னர், மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் ரவுடிகளால் தாக்கப்பட்டுள்ளாரே?

ஜவாஹிருல்லாஹ்: கருத்தை கருத்தால் தான் எதிர்கொள்ள வேண்டும். வன்முறை மிகவும் தவறு. மெளலவி ஷம்சுத்தீன் காஸிமி மீதான தாக்குதலை தமுமுக சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம் ஒரு பள்ளிவாசலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருப்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள இயலாது..நான் வளைகுடா சுற்றுப் பயணத்தில் இருப்பதால் ஊர் திரும்பி இது குறித்தான அடுத்த கட்ட நடவடிக்கையை அமைப்புடன் கலந்து பேசி முடிவெடுப்போம். மேலும் இது குறித்து கலகம் செய்தவர்கள் மேல் காவல் துறை நடவடிக்கை எடுக்கவும் ஆவண செய்வோம்.


கேள்வி: மிஸ்ரா கமிஷன் அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி கூறுங்களேன்?

ஜவாஹிருல்லாஹ் - 2004ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சியின் போது இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தனது அறிக்கையை மே21 2007ல் சமர்பித்தது. 2009 டிசம்பரில் இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசு இது வரை இந்த ஆணையத்தின் பரிந்துரையை செயல்படுத்தவில்லை. மத்திய அரசின் வேலை வாய்ப்பில் 15 விழுக்காடு மதவழி சிறுபான்மையினருக்க வழங்க வேண்டும். அதில் 10 விழுக்காடு முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டும் என்பது இந்த ஆணையத்தின் முதன்மையான பரிந்துரை. இது இயலாவிட்டால் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு 7 விழுக்காடு அளிக்க வேண்டும் என்று இந்த ஆணையம் பரிந்துரைச் செய்துள்ளது. இந்த ஆணையத்தின் பரிந்துரையை புறக்கணித்து உ.பி. தேர்தல் வரும் வேளையில் ஒத்துமொத்தமாக 4.5 விழுக்காடு முஸ்லிம்கள் உட்பட அனைத்து மதவழி சிறுபான்மையினருக்கு அளிக்கும் வகையில் முஸ்லிம்களை ஏமாற்றும்  வகையில் மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. இந்த ஏமாற்று வித்தைக்கு உ.பி. முஸ்லிம்கள் சட்டமன்ற தேர்தலில் நல்ல பாடத்தை படித்துக் கொடுத்தார்கள்.

கேள்வி: ஜமாத்தே இஸ்லாமி அமைப்பு  நீங்கள் பாடம் கற்ற இடம். இப்போது அந்த அமைப்பு தேசிய அளவிலான அரசியல் கட்சியொன்றை அமைத்துள்ளது. அவர்களுடனான உங்கள் உறவு எப்படி இருக்கிறது?

ஜவாஹிருல்லாஹ்: சென்ற   உள்ளாட்சி மன்றத் தேர்தலில் கூட சில ஊர்களில் அவர்களுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டோம். நாங்கள் போட்டியிட்ட இடங்களில் அவர்களின் ஒத்துழைப்பு நன்றாகவே இருந்தது.. அமைப்பு என்பதெற்கெல்லாம் அப்பாற்பட்டு பரஸ்பரம் தேர்தல் வெற்றிக்கு இரு தரப்புமே உதவிக் கொண்டோம்.

கேள்வி: முஸ்லிம் சமுதாயத்துக்கு உங்களால் நிறைய பலன் கிடைக்க கூடும் என்று தான் உங்களை சட்டசபைக்கு அனுப்பினோம். ஆனால் இதுவரை ஒன்றும் நீங்கள் அது குறித்து பேசியதாக ஒன்றும் தெரியவில்லையே..?

ஜவாஹிருல்லாஹ் -(சிரிக்கிறார்) என் தொகுதியில் ஓட்டு போட்ட மற்ற சமுதாயத்தினரும் இது போலதான் கேட்கிறார்கள்

நீங்கள் உங்கள் சமுதாய மக்களுக்கு மட்டுமே சட்டசபையில் பேசுவதாக தெரிகிறது. அன்றைக்கு கூட உங்கள் சட்டசபை பேச்சை கேட்டேன். 60 70 சதவீதம் உங்கள் மக்களுக்காக மட்டும்தான் பேசினீர்கள் என்று ஒருவர் என்னை கேட்டார். அவர்கள் அப்படிக் கேட்கிறார்கள். நீங்கள் இப்படிக் கேட்கிறீர்கள். நான் என்னளவுக்கு அனைத்து சாராருக்கும் பொதுவாகவே பேசுகிறேன். தொலைக்காட்சிகளில் சட்டசபை நிகழ்வுகள் மிகவும் சுருக்கமாக ஒளிபரப்பபடுவதால் நாங்கள் பேசுவது முழுமையாக மக்களுக்குச் சென்றடைவதில்லை.

கேள்வி: தமிழக முஸ்லீம்களுக்கு என்று தனித்த ஒரு செய்தித் தாள் இல்லை. தொலைக்காட்சி சேனலும் இல்லை.. இவையிரண்டில் ஏதேனும் ஒன்று கொண்டு வரும் திட்டம் உள்ளதா?

ஜவாஹிருல்லாஹ் - அவசியமான ஒன்றுதான். கேரளாவில் கூட மாத்யம் போன்ற பிரபல செய்தி தாள்கள் இருக்கின்றன. அவையெல்லாம் பெரும் முதலீட்டில் செய்ய வேண்டியவை. அந்தளவு இப்போது நம்மிடம் நிதி நிலைமை இல்லை. சமுதாயம் குறித்தான அக்கறையுள்ள பெரும் முதலீட்டாளர்கள் முன் வரும்போது இதெல்லாம் சாத்தியப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


கேள்வி: கேரளாவில் இஸ்லாமிய வங்கி போன்று அல்பரகா நிதியகம் இருக்கிறது. தமிழகத்தில் கொண்டு வரும் முயற்சிகளை எடுப்பீர்களா?

ஜவாஹிருல்லாஹ்- இல்லை கேரளாவில் நீங்கள் குறிப்பிடுகிற அல்பரகா நிதி நிறுவனம் வங்கி என்பதாக ரிசர்வ் வங்கியில் பதிவிடப்படவில்லை. மாறாக அது வங்கி அல்லாத நிதி நிறுவனம் அதாவது Non Banking Financial Corporation   என்றே ரிசர்வ் வங்கியில் அனுமதி வாங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் வங்கிப் போன்று எல்லா செயற்பாடுகளையும் அவர்கள் மேற்கொள்ளலாம் என்றாலும் காசோலையோ, வரைவோலையோ வழங்க விதிமுறை அனுமதிக்காது. மேலும், இந்த அல்பரகா வளைகுடா வாழ் கேரள அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்ட ஒரு திட்டம். அப்படி தமிழகம் சார்ந்த வளைகுடா அமைப்புகள் அத்தனை வலிமையாக இதனை முன்னெடுக்குமா என்பதைப் பொறுத்தே இதற்கு விடையளிக்கமுடியும்.

கேரளாவிலேயே முந்தைய ஆட்சியின் முதல்வர் இது குறித்து எல்லா நடவடிக்கைகளும் எடுத்து செயல்படுத்த துவங்குமுன் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவிட்டது.

கேள்வி:  சக அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றல் குறித்து……….

ஜவாஹிருல்லாஹ்- சமுதாயத்திற்கு பொதுவான விஷயங்களில் பிற அமைப்புகளுடன் கடந்த காலங்களில் இணைந்தே செயல்பட்டுள்ளோம். எடுத்துக்காட்டாக சென்ற திமுக ஆட்சியில் கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் தொடர்பாக அனைத்து அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டுள்ளோம். சமீபத்தில் 15 வயது பெண் திருமணம் தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் எடுத்து நடவடிக்கையை கண்டித்து அனைத்து அமைப்பினருடன் இணைந்து போராட்டத்தில் பங்குக் கொண்டோம்.


ஒவ்வொரு அமைச்சரும் மானியக் கோரிக்கை விவாதத்திற்க்குப் பதிலளித்துப் பேசிக் கொண்டிருக்கும் போது குறுக்கிட்டு யாரும் பேசக்கூடாது. சந்தேகங்கள் விளக்கங்கள் இருப்பினும் அவர் பேசி முடித்தபிறகுதான் பேசவேண்டும் என்பது அவை மரபு. அப்படி பொதுப்பணித்துறை மீதான மானியக் கோரிக்கை மீது அதன் அமைச்சர் பேசிக்கொண்டிருந்த போது இந்துக்கள் இராமனை வணங்குவது போல் கிறிஸ்துவர்கள் இயேசுவை வணங்குவது போல் முஸ்லீம்கள் முகமது நபியை வணங்குவது போல் .. என்று தொடரும்போதே நமது ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர்  அஸ்லம் பாஷா எழுந்து “மன்னிக்கவும் முஸ்லீம்கள் முகமது நபியை வணங்குவதில்லை.அல்லாஹ்வைத் தான் வணங்குவோம் என்று குறுக்கிட்டுக் குறிப்பிட்டார். (அப்போது நான் (ஜவாஹிருல்லாஹ்) மும்பையில் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் பொதுக்குழுவில் இருந்தேன்) உடனே முதல்வர் ஜெயலலிதா எழுந்து முஸ்லீம்கள் அல்லாஹ்வைத்தான் வணங்குகிறார்கள். முகமது நபியை இல்லை. அமைச்சரின் அந்த பேச்சு சபைக்குறிப்பில் திருத்தப்பட்டுப் பதியப்படும்” என்று கூறியதாக ஜவாஹிருல்லாஹ் குறிப்பிட்டார்.


உளநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் மீது மிருகத்தனமான தாக்குதல்


அல் ஹலீல்: கடந்த திங்கட்கிழமை (30/07/2012) பெய்ட் உம்மார் கிராமத்தைச் சேர்ந்த உளநலம் பாதிக்கப் பட்ட பலஸ்தீன் இளைஞனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த ஆக்கிரமிப்புப் படை அவனை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளது.

முஹம்மத் அபூ தியா (வயது 23) உளநலம் பாதிக்கப்பட்டவர். அவருடைய வீட்டுக்குள் அடாவடியாக நுழைந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம், அவரைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளது. உளநலம் பாதிக்கப்பட்ட தமது மகன் கொடூரமாக அடித்து இம்சிக்கப்படுவது பொறுக்காமல் தடுக்க முனைந்த பெற்றோரையும் ஆக்கிரமிப்புப் படை மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளது.

அபூ தியாவின் நிலைமை குறித்து விளக்கிப் புரியவைக்க முற்பட்ட பெற்றோரின் மன்றாட்டங்கள் எவற்றையுமே பொருட்படுத்தாத இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை, மேற்படி இளைஞனைத் தடுப்பு முகாமுக்கு இழுத்துச் சென்றுள்ளது என பெய்ட் உம்மார் கிராமத்தின் தேசிய இணைப்பாளர் முஹம்மத் அவாத் குறிப்பிட்டுள்ளார். 

உளநலமற்ற ஒருவர் என்ற கருணைகூட இன்றி, அபூ தியாவையும் அவரது வயோதிகப் பெற்றோரையும் மிருகத்தனமாகத் தாக்கிவிட்டு, அவ் இளைஞனைத் தடுப்புமுகாமுக்கு எடுத்துச் சென்றுள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளரின் செயல் சகலவித மனிதப் பண்புகளுக்கும் அப்பாற்பட்டது என உள்ளூர் மக்கள் அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

31 ஜூலை, 2012

பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!!


அதிகமாக பழத்தை விரும்பி சாப்பிடுபவர்களா நீங்கள்? அதிலும் அந்த பழத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு, தோலை தூக்கி போடுபவர்களா? அவர்களுக்கு ஒரு முக்கியமான விஷயம் காத்திருக்கு!!! அப்படி தோலை தூக்கி போடாமல் அதையும் சாப்பிடும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். ஏனெனில் பழத்தை விட பழத்தில் தோல்களிலேயே அதிகமான அளவு ஊட்டச்சத்தானது இருக்கிறது. அந்த தோலானது சுவையான இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதை கண்டிப்பாக சாப்பிடுங்கள். ஏனென்றால் அதனை உண்பதால் ஆரோக்கியமாக இருக்க முடியும். அதிலும் முக்கியமாக பழத்தை சாப்பிடும் முன்பு நன்கு கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும். அத்தகைய பழங்களில் எவற்றின் தோல்களை முக்கியமாக சாப்பிட வேண்டும் என்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்...
மாம்பழம் : பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழத்தின் பழத்தில் மட்டும் ஊட்டச்சத்தானது இல்லை, அதன் தோலிலும் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் தோலை சாப்பிட்டால் நீரிழிவு, புற்றுநோய் போன்ற நோய்கள் குணமாவதுடன், இரத்தத்தில் உள்ள கொழுப்புகளின் அளவை குறைத்துவிடும். ஆகவே இந்த மாம்பழத்தை தினமும் ஒரு துண்டுகளை தோலோடு சாப்பிட்டால் நல்லது.
ஆப்பிள் : நிறைய பேர் ஆப்பிளை சாப்பிடும் முன் அதன் தோலை நீக்கி விட்டு, பின் அதனை சாப்பிடுவர். ஆனால் அந்த ஆப்பிளின் தோலானது அவ்வளவு கடினமாக இருக்காது, இருப்பினும் அவ்வாறே உண்பர். அத்தகைய ஆப்பிளின் தோலை சாப்பிடுவதால் விரைவில் செரிமானமடைவதுடன், பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது. ஆப்பிளின் தோலில் கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. மேலும் அது டயட் மேற்கொள்வோருக்கு ஏற்ற அதிகமான நார்ச்சத்தானது உள்ளது. அதிலும் அளவுக்கு அதிகமான ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால், உடலில் இருக்கும் செல்கள் வலுவடைவதுடன், இதய நோய் மற்றும் நீரிழிவு ஏற்படாமல் பாதுகாக்கிறது. இது தோலுடன் சாப்பிடும் பழங்களில் மிகவும் எளிதாக விழுங்கக்கூடிய பழம்.
எலுமிச்சை : எலுமிச்சையின் தோலை சாப்பிட்டால், உடலில் செரிமானமானது நன்கு நடைபெறும். இது வயிற்றில் ஏற்படும் தசைப்பிடிப்புகளை நீக்கும். ஒரு சிறு துண்டு எலுமிச்சை தோலை தினமும் சாப்பிட்டால், உடலில் இரத்த சுழற்சியானது நன்கு நடைபெறும். மேலும் ஆயுர்வேதத்தில் கல்லீரலில் ஏற்படும் நோய்க்கு, இந்த எலுமிச்சையின் தோலில் இருந்து சாற்றை எடுத்தே கொடுப்பர். அதிலும் ஆயுவேதத்தில் ஸ்கர்வி நோயை சரிசெய்ய, இந்த சாற்றையே கொடுப்பார்கள். தினமும் ஒரு சிறு துண்டுகளை சாப்பிட்டால் சருமமும் அழகாக இருக்கும்.
ஆரஞ்சு : ஆரஞ்சு பழத்தோலில் அதிக அளவு தாவர ஊட்டச்சத்துகள் மற்றும் ஃப்ளேவனாய்டுகள் உள்ளன. இதுவும் செரிமானத்திற்கு சிறந்தது. மேலும் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கும். அதிலும் இதனை சமையலில் பயன்படுத்தினால், ஒரு நல்ல சுவையானது கிடைக்கும். இந்த ஆரஞ்சு பழத்தோலை அப்படியே சாப்பிட முடியாதவர்கள், அதனை சமையலில் சேர்த்து உண்ணலாம்.
கிவி : கிவி பழத்தின் தோலில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அளவுக்கும் அதிகமாக இருக்கிறது. அதிலும் இதனை உண்பதால் இரத்தமானது லேசாக இருப்பதோடு, உடலில் எளிதாக நன்கு சுழற்சியானது நடைபெற்று, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. ஆகவே இந்த பழத்தை தினமும் உண்டால், உடலுக்கு தேவையான சத்துக்களை எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம்.

3 ஜூலை, 2012

'வாழ்நாளிலேயே' இல்லாத அளவுக்கு மோசமாக குறைந்த ரூபாயின் மதிப்பு!


டெல்லி: ரூபாயின் மதிப்பு மிக மோசமான முறையில் குறைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு, ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 56.54 என்று எகிறியுள்ளது.
இதற்கு முன்பு கடந்த மே 21ம் தேதி ரூபாயின் மதிப்பு 56.50 ஆக இருந்தது. கச்சா எண்ணைய் ஏற்றுமதியாளர்களிடையே டாலருக்கு கிராக்கி அதிகரித்துள்ளதே இதற்கு முக்கியக் காரணம்.
ரூபாயின் மதிப்பு வெகுவாக குறைந்து வருவதால் இந்திய ரிசர்வ் வங்கி அவசர கதியில் செயல்பட்டு ரூபாயைக் காப்பாற்ற நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று தெரிகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு வெளிநாட்டு நிதிகள் பெருமளவில் வந்ததால், ரூபாயின் மதிப்பு பெருமளவில் அடி வாங்காமல் தப்பியது. ஆனால் ஏப்ரல், மே மாதத்தில் அன்னிய முதலீடுகள் குறைந்ததாலும், நிதி வரவு இறங்கியதாலும் தற்போது ரூபாயின் மதிப்பு கிடுகிடுவென சரிந்து கொண்டிருக்கிறது.
தொடர்ந்து இந்த நிலை நீடிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். அடுத்த சில நாட்களில் இது மேலும் மோசமாகி ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 57 ஆக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

15 ஜூன், 2012

கள்ளக்காதலுக்காக கணவர் கொலை : பெண்ணுடன் நான்கு பேர் கைது


நரிக்குடி : விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்த மனைவி,மற்றும் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். நரிக்குடி வீரசோழனை சேர்ந்தவர் அக்பர் அலி ராஜா,32. மாற்றுத் திறனாளியான இவர் அங்கு டெலிபோன் பூத் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் கழுத்தில் கயிறு இறுக்கப்பட்டு, மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். வீரசோழன் போலீசார் விசாரித்தனர். இதில்,"" அக்பர் அலி ராஜா மீது அவரது மனைவி பீமா பானு,21,க்கு திருமணம் நாள் முதலே வெறுப்பு இருந்துள்ளது. இந்நிலையில், வீரசோழனை சேர்ந்த அப்துல் ரகுமானுக்கும்( சென்னையில் டிரைவராக உள்ளார்) பீமா பானுவிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கடந்த இரு வாரத்திற்கு முன் பீமாபானுவை அப்துல்ரகுமான், சென்னைக்கு அழைத்துள்ளார். அதன்படி சென்ற இவரை, உறவினர்கள் தடுத்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இதை தொடர்ந்து இடையூறாக உள்ள கணவரை கொலை செய்ய கள்ளக்காதலனுடன் சேர்ந்து பீமா பானு திட்டம் தீட்டினர். இதற்காக அப்துல் ரகுமான் கடந்த ஜூன் 11 ல் வீரசோழன் வந்தார். இரண்டு நாட்களுக்கு முன் முன் இரவு 12 மணிக்கு , நண்பர்களான வீரசோழனைச் சேர்ந்த ஏ.தமீம் அன்சாரி ,21, கே.தமீம் அன்சாரி, 20, ஆகியோருடன் அக்பர் அலி ராஜா வீட்டிற்கு வந்த அப்துல்ரகுமான், தூங்கிக் கொண்டிருந்த அவரின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்து, அவராக தூக்கில் தொங்கியது போல் செய்தனர். இதற்கு பீமா பானுவும் உடந்தையாக இருந்துள்ளது தெரிய வந்தது. அதன்படி, நரிக்குடி இன்ஸ்பெக்டர் சண்முகம், தனிப்படை எஸ்.ஐ., அன்புராஜ் மற்றும் போலீசார் , பீமா பானு , கள்ளகாதலன் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்தனர்.

1 ஜூன், 2012

தொப்பி, ஸ்கார்ப், டர்பன் அணிய முஸ்லீம், சீக்கியர்களுக்கு நியூயார்க் அனுமதி


நியூ யார்க் : நியூயார்க்கில் உள்ள அனைத்து போக்குவரத்து அமைப்புகளிலும் பணியாற்றும் முஸ்லீம், சீக்கியர்களுக்கு தொப்பி, தலைப்பாகை அணிவதில் விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளதாக அமெரிக்க நீதித்துறை அலுவலகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட இரட்டை கோபுர தாக்குதலை தொடர்ந்து நியூயார்க் மாகாணத்தில் பேருந்து, ரயில் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து நிறுவனங்களில் பணியாற்றும் அனைவரும் தலையில் தொப்பி, தலைப்பாகை, டர்பன், ஸ்கார்ப், ஹிஜாப் உள்ளிட்டவை அணியும் போது அதில் போக்குவரத்து அலுவலகத்தின் சின்னம் பொறிக்கப்பட்டதை தான் அணிய வேண்டும் என்று கட்டுபாடு விதிக்கப்பட்டது.
மார்ச் 2002ல் அமுல்படுத்தப்பட்ட உத்தரவுக்கு சீக்கியர்களும் முஸ்லீம்களும் தங்களை தனிமைப்படுத்துவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்த போதிலும் சட்டத்தை வாபஸ் பெற மெட்ரோ போக்குவரத்து அமைப்பு மறுத்தது. 2004ல் இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் எதிரொலியாக 8 ஆண்டுகள் கழித்து முஸ்லீம்களும் சீக்கியர்களும் எவ்வித கட்டுபாடுகளும் இன்றி தலைப்பாகை, தொப்பி, ஸ்கார்ப் உள்ளிட்டவற்றை அணியலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த சீக்கிய கூட்டமைப்பின் தலைவர் அமர்தீப் சிங் இது வரை தங்கள் நம்பிக்கை அல்லது வேலை இரண்டில் ஒன்றை மட்டுமே மேற்கொள்ள வேண்டிய நிலையிலிருந்து சிறுபான்மையினரை காப்பாற்றிய தீர்ப்பை வரவேற்பதாகவும் இரட்டை கோபுர தாக்குதலுக்காக பழிவாங்கபட்ட அப்பாவி சீக்கிய மற்றும் முஸ்லீம் மக்களின் துயரம் முடிவுக்கு வந்ததற்காகவும் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

5 மே, 2012

அஹ்மதியாக்களை முஸ்லீம்கள் அல்ல என்று அரசு அறிவிக்க கோரும் முப்தி


காஷ்மீர் : அஹ்மதியாக்களை அரசு முஸ்லீம்கள் அல்ல என்று அறிவிக்கும் வகையில் சட்டம் இயற்ற  வேண்டும் என்று காஷ்மீரின் முப்தி ஆஜம் (தலைமை மதகுரு) முப்தி முஹமது பஷிர் உத்தீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் நடந்த ஜம்மு காஷ்மீர் முஸ்லீம் தனிநபர் வாரியத்தின் கூட்டத்தில் இக்கோரிக்கையை முப்தி முஹமது பஷீர் உத்தீன் கோரிக்கை விடுத்துள்ளார். காஷ்மீரில் அஹமதியாக்கள் பாமர முஸ்லீம்களிடத்தில் தவறான கருத்துக்களை முஸ்லீம்கள் மத்தியில் பரப்புவதாக தன்னிடம் மத தலைவர்கள் கூறியதாக கூறிய முப்தி இதை தடுக்கவே காஷ்மீர் சட்டசபையில் அஹ்மதியாக்களை முஸ்லீம்கள் அல்ல என அறிவிக்கும் சட்டத்தை கொண்டு வர வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதாக கூறினார்.

உலகின் எல்லா பாகங்களிலும் காதியானிகள் என்று அழைக்கப்படும் அஹ்மதியாக்கள் முஸ்லீம்கள் அல்ல என்று அறிவிக்கப்பட்டு இருப்பதாக கூறிய முப்தி ஜுல்பிகார் அலி புட்டோவின் காலத்தில் பாகிஸ்தானில் அஹ்மதியாக்கள் அவ்வாறு அறிவிக்கப்பட்டதாக கூறினார்.
19வது நூற்றாண்டில் பஞ்சாபில் உள்ள காதியான் எனும் ஊரை சார்ந்த மிர்சா குலாம் அஹ்மது (1835 - 1908) என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட அஹ்மதியா இயக்கம் முஸ்லீம்களின் தூதராகிய முஹம்மதுவுக்கு பின் தான் வாக்களிக்கபட்ட மஹதி என்று கூறி புதிய கொள்கையை உருவாக்கியது. மேலும் வெள்ளையர்களுக்கு எதிராக முஸ்லீம்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்திய போது ஜிஹாது கூடாது, பிரிட்டிஷாருக்கு கட்டுபடுவது கடமை என்று கூறியதால் பிரிட்டிஷாரின் செல்லப்பிள்ளையாக விளங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

18 ஏப்ரல், 2012

அமெரிக்க முஸ்லிம்கள் பயங்கரவாதிகளா?


நிவ்யோர்க்: அமெரிக்காவின் பிரதான நகரங்கள் மூன்றில் வாழும் முஸ்லிம்களுடைய அன்றாடச் சுமுக வாழ்வு கேள்விக்குறியாகும் நிலை தற்போது தோன்றியிருப்பதாக சமூகச் செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நிவ்யோர்க், நிவ் ஜேர்ஸி, நிவ் ஓர்லீன்ஸ் ஆகிய நகரங்களில் உள்ள மசூதிகள், உணவகங்கள், புத்தகக் கடைகள் முதல் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் வரை அமெரிக்க முஸ்லிம்கள் நிவ்யோர்க் காவல்துறையினரின் அதிதீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
தம்முடைய மத நம்பிக்கையை மட்டும் அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த இன ஒதுக்கல்நடவடிக்கை, அங்கு வாழும் முஸ்லிம்களின் ஆத்திரத்தைக் கிளறியுள்ள நிலையில், "நிவ்யோர்க் நகரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மீதான தீவிரக் கண்காணிப்பு இன்றியமையாததாகும்" என நகர மேயர் மைக்கேல் ப்ளூம்பேர்க், காவல்துறை ஆணையர் ரே கெல்லி ஆகியோர் குறிப்பிட்டுள்ளமை மிகப் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
"பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிரான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளல் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுமத்தை குற்றவாளிக் கண்ணோட்டத்தோடு நோக்குதல் என்பது மனித உரிமை மீறலாகும். குறித்த சமூகத்தினர் இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இத்தகைய சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகள் சமூகங்களுக்கு இடையிலான நல்லுறவையும் பரஸ்பர புரிந்துணர்வையும் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக, வெறுப்பையும் துவேஷத்தையுமே வளர்க்கும் என்பதோடு, எதிர்மறை விளைவுகளைத் தோற்றுவிக்கும் சாத்தியக்கூறுகளும் இதில் உள்ளன" என நிவ்யோர்க் நகர காவல்துறையினரின் தூரநோக்கற்ற செயல்பாடுகளைச் சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஏனைய நகரங்கள் சிலவற்றில் உள்ள காவல்துறை அதிகாரிகள், நிவ்யோர்க் காவல்துறையினரின் தூரநோக்கற்ற செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சிக்காகோ நகர மேயர் ரஹ்ம் இம்மானுவேல்,"நிவ்யோர்க் நகரில் உள்ளது போல சிக்காகோ நகரில் முஸ்லிம் மக்களைப் புண்படுத்தும் வகையிலான இத்தகைய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை" என அழுத்தம் திருத்தமாகக் கருத்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
"பயங்கரவாதத்துக்கு எதிரான முன்னெடுப்புக்களில் நம்மோடு சேர்ந்து பங்களிப்புச் செய்ய முஸ்லிம் மக்கள்தாம் மிகச் சிறந்த துணைவர்கள். எனவே, பயங்கரவாதத்தைத் தடுக்க முயற்சிக்கிறோம் என்ற பெயரில் அமெரிக்கப் பிரஜைகளான முஸ்லிம் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகளைச் சீர்குலைப்பதில் நமக்கு உடன்பாடில்லை" என லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறையின் துணைத் தலைவர் மைக்கல் டொவ்னிங் வலியுறுத்தியுள்ளார்.
பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளின் பொருட்டு அமர்த்தப்பட்டுள்ள 1000 அதிரடிக் காவல்துறையினரின் குடியிருப்புத் திட்டம், அமெரிக்க மக்கள்மீது வருடாந்தம் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரிச்சுமையை ஏற்றியுள்ளது.
இந்நிலையில், முஸ்லிம் மக்களுக்கு எதிரான நிவ்யோர்க் நகரக் காவல்துறையினரின் இன ஒதுக்கல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பல்வேறு பேரணிகள், கருத்தரங்குகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றன. நகர மேயர் வருடாந்தம் ஒழுங்குசெய்யும் மத நல்லிணக்க விருந்துபசார வைபவத்தில் கலந்துகொள்வதை முஸ்லிம் தலைவர்கள் பகிஷ்கரித்துள்ளனர். அமெரிக்காவின் மனித உரிமை அமைப்புக்களும் இவ்விடயம் தொடர்பில் தமது அழுத்தமான கண்டனத்தைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எந்தவித இன, மத வேறுபாடுகளுக்கும் அப்பால் அனைவரும் அமெரிக்கர்களே என்ற வகையில் சமத்துவமாகவும், சுயகௌரவத்துடனும் நடத்தப்படுவதன் மூலமே அமெரிக்கப் பாதுகாப்பைப் பலப்படுத்த முடியும் என்பது சமூகச் செயற்பாட்டாளர்களின் உறுதியான நம்பிக்கையாக உள்ளது.

25 மார்ச், 2012

வக்ப் போர்டு தலைவர் நியமனம் எப்போது?


ஆட்சி மாற்றங்கள் நிகழும் போது முந்தைய அரசால் நியமிக்கப் பட்ட வாரியத் தலைவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் எனப் பலரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விடுவது வழக்கம். அது போன்றே முந்தைய திமுக அரசால் வக்பு போர்டு தலைவராக நியமிக்கப் பட்ட கவிக்கோ அப்துல் ரஹ்மானும்  தம் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
எனினும் வக்பு போர்டுக்கு இதுவரை புதிய தலைவர் நியமிக்கப் பட வில்லை. தலைவர் இல்லாத நிலையிலேதான் வக்பு போர்டு இது வரை செயல் பட்டு வருகிறது. வக்பு போர்டு தலைவர் பதவி மனிதநேய மக்கள் கட்சிக்கு வழங்கப் படும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் மனித நேய மக்கள் கட்சியும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி விட்டது.
கவிக்கோ அப்துல் ரஹ்மான் ராஜினாமா செய்து விட்ட நிலையில் அவரது பெயர் இன்னும் வக்ப் போர்டு இணைய தளத்தில் இருந்து நீக்கப் பட வில்லை. தமிழக அரசு இனி மேலும் காலம் தாழ்த்தாமல் இஸ்லாமிய மக்களின் சொத்துக்களைப் பராமரிக்கும் வக்ப் போர்டுக்கு உடனடியாக சேர்மன் நியமிக்கப் பட வேண்டும் என்று முஸ்லிம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஊழலை விட ஐஸ்வர்யாவின் பிரசவமும் சச்சினின் சதமும் முக்கியமா – நீதிபதி கட்ஜு காட்டம்


புது தில்லி : உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும் பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜு அன்னா ஹசாரேவை தாம் மதித்தாலும் ஊழலை ஒழிக்க எவ்வித விஞ்ஞான அடிப்படையிலான திட்டங்களும் அவரிடம் இல்லை என்றும் ஊழலை விட முக்கியமற்ற விஷயங்களுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
ஊடகங்கள் ஊழல் ஒழிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட அதிகமாக சச்சின் டெண்டுல்கரின் 100வது சதம், ராகுல் டிராவிட்டின் ஓய்வு, ஐஸ்வர்யா பச்சனின் பிரசவம், நடிகர் தேவ் ஆனந்தின் மறைவு போன்றவற்றிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக கட்ஜு குற்றம் சாட்டினார்.
அன்னா ஹசாரே ஒரு நேர்மையான மனிதர் என்று தான் நம்பும் அதே சமயத்தில் ஊழலை ஒழிக்க அவரிடம் எவ்வித விஞ்ஞான பூர்வ திட்டங்களும் இல்லை என்றும் கட்ஜு கூறினார். பாரத் மாதா கி ஜெய் மற்றும் இன்குலாப் ஜிந்தாபாத் என்று 10 நாட்கள் கோஷமிடுவதால் ஊழலை ஒழிக்க முடியாது என்றும் நீண்ட கால நோக்கில் ஆக்கபூர்வ திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் மார்க்கண்டேய கட்ஜு கூறினார்

பிரிட்டன்: முஸ்லிம்களுக்கு எதிராக அரசியல் கட்சி தொடக்கம்


ஆங்கிலேயர் தற்காப்பு இயக்கம் என்ற பெயரில் மூன்றாண்டுகளாக பிரிட்டனில் இயங்கிவந்த அமைப்பொன்று வலதுசாரி அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிரான கட்சியாக விடுதலைக் கட்சி Freedom Party என்ற பெயரில் ஓர் அரசியல் இயக்கமாக உருவெடுத்துள்ளது.
3 ஆண்டுகளுக்கு முன்னர் அடித்தள மக்களின் இயக்கம் என்ற தோற்றத்தில்  இந்த விடுதலைக் கட்சி இயக்கம் தொடங்கிக் கட்டமைக்கப்பட்டது. இலண்டனுக்கு வடக்கேயுள்ள லூட்டோன் நகரத்தில் விடுதலைக் கட்சி (Freedom Party) என்ற பெயரில் இது உதயமானது. இப்போது, இந்த அமைப்பு இஸ்லாமியருக்கு எதிரான அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது.

பிரிட்டிஷ் இராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து நாடு திரும்பியவுடன் இராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது. அப்போபோது முஸ்லீம்கள் அவர்களை எதிர்த்துக் கோஷம் எழுப்பினர். இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முஸ்லீம்களுக்கு எதிரான இயக்கத்தில் 12,000 பேர் இணைந்துள்ளனர். 31,000 பேர் தங்களின் ஆதரவை ஃபேஸ்புக் இணையதளம் மூலம் தெரிவித்துள்ளனராம்.

இந்தத் தகவலை இந்த அமைப்பின் தலைவர் ஸ்டீஃபன் லென்னோன் செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் மக்கள்தொகை 62 மில்லியன்  என்பது குறிக்கத்தக்கது.

24 மார்ச், 2012

தோசை சாப்பிட்டாலே பணக்காரரா? பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேள்வி!


வக்ப் வாரியத் தலைவரை உடனடியாக நியமனம் செய்யவும், கூடங்குளம் அணுஉலை தொடர்பான அரசின் முடிவை மீள்பரிசீலனை செய்யவும், திட்டக் கமிசனின் வறுமைக் கோட்டு வரையறையை திரும்பப் பெற்றுக் கொள்ளவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் 21,22.03.2012 ஆகிய  தேதிகளில் மதுரையில் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ஹாலித் முஹம்மது, துணை தலைவர் முஹம்மது இஸ்மாயில் பொருளாளர் கே. எஸ்.எம். இப்ராஹிம் என்ற அஸ்கர் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

செயற்குழுவில் நிறைவேற்றப் பட்ட  தீர்மானங்கள் :

1. புதிய அரசு பொறுப்பேற்று பல மாதங்களாகியும் வக்ஃபு வாரியத் தலைவர் இன்னும் நியமனம் செய்யப்பட வில்லை. இது வக்ஃப் வாரியம் மீதும் அதன் சொத்துக்கள் மீதும் அரசு  கவனம் செலுத்த விரும்பவில்லை என்பதுடன் முஸ்லிம்கள் விவகாரத்தில் அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு வருவது போன்று தோற் றமளிக்கின்றது. அது மட்டுமல்லாமல் வக்ஃப் சொத்துக்கள் அரசியல்வாதிகளால் குறிப்பாக ஆளும் கட்சியினரால்  ஆக்கிரமிப்பு  செய்யப்பட்டு வருவதும் அதனை ஆளும் அரசு கண்டும் காணாமல் இருப்பதை வன்மையாக கண்டிக்கும் இச்செயற்குழு இது தொடர்பாக உள்துறைச் செயலர்,சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்துஉரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென முறையிடவும் தீர்மானித்துள்ளது.
2. கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து போராடி  வரும் மக்களின் உணர்வுகள் மற்றும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளநியாயமான சந்தேகங்களை புறந்தள்ளி விட்டு அணுஉலை செயல்பட தமிழக அμசு அனுமதித்துள்ளதை வன்மையாக கண்டிக்ககின்றது இச்செயற்குழு. மேலும்,  கூடங்குளம் பகுதி மக்கள் காவல்துறையினரின் குவிப்பினால் அடக்கு முறைக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டு அவர்களின் தினசரி வாழ்க்கை பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது. அரசு  இது விஷயத்தில் கூடங்குளம் மக்களின் ஜனநாயகரீதியிலான போராட்டத்திற்கு மதிப்பளித்து அங்கு   நிலைமைகள் சீரடைய துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கூடங்குளம் அணுஉலை தொடர்பான அரசின் முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கின்றது.
3. இந்திய நகரங்களில் வாழும் ஒருவர் ஒரு நாளைக்கு ரூபாய் 29ம் கிராமத்தில் வாழக்கூடிய ஒருவர் ரூபாய் 22ம் சம்பாதிக்கின்றார் எனில் அவர் அனைத்து வசதிகளையும் ஒருங்கே அமையப் பெற்றவர் என்றும் அதற்கு கீழ் வருமானம் உள்ளவர்கள் தான் ஏழைகள் என்றும் ஆய்வு செய்து செய்தி வெளியிட்டுள்ளது மத்திய அμசின் திட்டக் கமிஷன்.இன்று பெட்ரோல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டு பலரின் தினசரி வாழ்வையே கேள்விக்குரியதாக ஆக்கி வரும் இவ்வேளையில் நீங்கள் ஹோட்டலில் ஒரு தோசை சாப்பிட்டாலே பணக்காரர்கள் பட்டியலில் வந்து விடுவீர்கள் எனும் கேலிக் கூத்தான அறிக்கையை வெளியிட்டு இந்திய மக்களின் மேல் மேலும்ஒரு இடியை இறக்கி உள்ளது மத்திய அரசின் திட்டக்கமிஷன்.திட்டக்கமிஷனின் இந்த அறிவிப்பை வன்மையாக கண்டிக்கும் பாப்புலர் ஃப்μண்ட் திட்டக் கமிஷனின் இந்தஅறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டுமெனவும் நடைமுறைக்கும் அறிவுக்கும் ஒத்துவராத இது போன்ற முடிவுகளை வெளியிடுவதில் மத்திய அரசு போதிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கின்றது.

23 மார்ச், 2012

பாப்புலர் பிரண்ட் பிரமுகர் கொலை - மார்க்ஸிஸ்ட் கட்சியினர் கைது


பாப்புலர் பிரண்ட் கட்சியினைச் சார்ந்த முஹம்மத் பஸல் கொலை செய்யப்பட்ட வழக்கில் மார்க்ஸிஸ்ட் கட்சியினரைச் சார்ந்த மூவரை மத்திய புலனாய்வுக்குழு கைது செய்துள்ளது.
பாப்புலர் பிரண்ட் கட்சியின் தளச்சேரி தலைவராக 2006 ஆம் ஆண்டு பஸல் இருந்து வந்தார். அப்போது இந்தக் கட்சி தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. பஸல் மார்க்ஸிஸ்ட் கட்சியில் இருந்து விலகி பாப்புலர் பிரண்ட் கட்சியில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க்ஸிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்களை பாப்புலர் பிரண்டில் சேருமாறு அவர் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது கோபம் கொண்ட அருண்தாஸ், காலேஷ் மற்றும் அருண்குமார்   ஆகியோர் பஸலைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பஸலை இம் மூவரும் கொலை செய்துள்ளனர். தற்போது இம்மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரையும் மார்ச் 29 வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கா விசா பெறுவதற்கு இனி நேர்காணல் கிடையாது !


அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் சிலர் அந்நாட்டு விசா எடுத்து அங்கு பணி செய்தோ அல்லது வசிக்கவோ செய்கின்றனர். அவர்கள் தங்களின் விசா முடிவுறும் காலத்தைப் பொறுத்து புதுப்பித்து வருகின்றனர்.
அதன்படி, பி1, பி2, சி மற்றும் டி பிரிவு விசாவில் சென்றுள்ளவர்கள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது விசாவினை புதுப்பித்து வருகின்றனர். அவர்கள் விசாவை புதுப்பிக்கும்போது நேர்காணல் இருக்கும். அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே விசா புதுப்பிக்கப்படும்.

ஆனால் இந்த முறை தற்போது மாற்றப்பட்டுள்ளதாக துணைத்தூதரக விவகாரங்கள் துறையின் உதவி செயலாளர் ஜானிஸ் ஜேக்கப் கூறியுள்ளார். மேலும், இந்த புதிய முறை வர்த்தகர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோருக்கு பொருந்தும்.

இந்த புதிய முறை இந்தியாவில் தொடங்கப்பட உள்ளது. ஆனால் பாதுகாப்பு கருதி இவர்கள் எப்போது வேண்டுமானாலும் நேர்காணலுக்கு உட்படுத்தப்படுவர் எனவும் கூறினார்

2 மார்ச், 2012

முஷாரஃப்பை கைது செய்ய பாகிஸ்தான் தீவிரம்!


முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப்பை கைது செய்து பாகிஸ்தானுக்குக் கொண்டு வருவதில் பாகிஸ்தான் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக அந்நாடு பன்னாட்டுக் காவல்துறையின் ஒத்துழைப்பை நாடியுள்ளது.
முஷாரஃப் தற்போது லண்டனில் வசித்து வருகிறார் என்பது அறிந்ததே. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் கொலைவழக்கில் முஷாரஃபை விசாரிக்க வகை செய்யும் விதமாக அவர் கைது செய்யப்படவுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபை கைது செய்ய செங்கூவல் (ரெட் அலர்ட்) பிறப்பிக்குமாறு சர்வதேச காவல்துறையான இண்ட்டர் போலை பாகிஸ்தான் அதிகாரிகள் கோரியுள்ளதாக இங்கிலாந்து செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பிரதமர் பெனாசிர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக அவரை திரும்பக் கொண்டுவர பாகிஸ்தான் முயன்று வருகிறது. முஷாரபை கைது செய்ய இன்டர்போலுக்கு  நேற்று முறைப்படியான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.


14 பிப்ரவரி, 2012

கருத்து சுதந்திரம் வென்றது!


வாக்களித்த குடிமகனுக்கு ஆட்சி நிர்வாகத்தை பற்றி கருத்தும் ஆலோசனையும் சொல்ல உரிமை உண்டு அந்த வகையில் கடந்த மார்ச் மாதத்தில்ஊழல் இல்லாத ராஜ்யம் உருவாக மக்கள் உரிமை வென்றிட ஒரு ஆலோசனை கட்டுரையாக, "வேண்டும் ஒரு மக்கள் தொடர்பு துறை" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இந்நேரம்.காமில் எழுதினேன்.

                     இக்கட்டுரை வெளியானபோது 'இது ஒரு நல்ல ஆலோசனை' என்று சிலரும், 'தான் ஒரு அறிவாளியாக நினைத்து உளறுவதாக' சிலரும் கட்டுரையை படித்து கருத்து சொன்னார்கள். கட்டுரை எழுதிய எனக்கும் கருத்து சொன்ன வாசகர்களுக்கும் தமிழக அரசு பதில் சொல்லி விட்டது. அதாவது கடந்த வாரம் அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்,

                     "ஆறு கோடி செலவில் மக்கள் தொடர்பு மையம் உருவாக்க படும்; அதில் மக்கள், அரசு சார்ந்த எந்த விசயத்தையும் விளக்கம் கேட்கலாம்; விண்ணப்பம் பெறலாம்; புகார் அளிக்கலாம்; புகாரின் நிலையை தெரிந்து கொள்ளலாம்" என்பதாகும். மிக அருமையான திட்டம்! அரசுக்கு நன்றி சொல்லும் அதே நேரத்தில் மீண்டும் சில கருத்தை சொல்ல விரும்புகிறேன்.

                       தானே புயல் பாதிக்கப்பட்ட இடம் முழு நிவாரணம் பெறாத நிலையில், அரசு அலுவலக கட்டிடங்கள் சிதிலம் அடைந்து அபாயநிலையில் இருக்கும் நிலையில், நிதி பற்றாகுறையால் புதிய குடும்ப அட்டை வழங்கப்படாமல் காலநீட்டிப்பு செய்து கொண்டு இருக்கும் நிலையில், தமிழகத்தின் பல கிராமங்களில் உடைந்த பாலங்கள் இருக்கும் நிலையில், இன்னும்  கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் அணிவகுத்து நிற்கும் நிலையில் எம்.ஜி.ஆர், அண்ணா சமாதியைப் புதுப்புக்க ஒன்பது கோடி, பெண் சட்டபேரவை உறுப்பினருக்கு ஏழு கோடியில் ஜிம் வசதி என்று அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.

                         ஆனால்  மக்கள் பிரச்சனைக்கு சிம்ம சொப்பனமாக இருக்க போகும் மக்கள் தொடர்பு மையம் உருவாக்க ஆறு கோடி என்பது குறைவுதான், காரணம் முழுக்க முழுக்க கணினி தொழில்நுட்பம் கொண்டு செயல்பட வேண்டும். சரி பரவாயில்லை ஒதுக்கியதை வைத்து திருப்தி கொள்வோம்,
                                         அதேநேரத்தில் அரசுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்:
                            தற்போது மாவட்ட ஆட்சியரிடம் ஒரு குறையை முன்வைத்தால் அதை சரிசெய்ய முப்பது நாள் அவகாசம் வழங்கபடுகிறது, இதை  தற்போதைய புதிய மக்கள் தொடர்பு மையத்தில் ஒரு வாரத்தில் சரிசெய்ய வேண்டும்; எந்த காரணத்தை கொண்டும்(நிதி உள்பட)இந்த திட்டம் கை விடபடக் கூடாது.
- கலீல், வீரசோழன்

  
www.inneram.com  11.02.2012