என்னை தொட்டவர்கள் !

14 பிப்ரவரி, 2012

கருத்து சுதந்திரம் வென்றது!


வாக்களித்த குடிமகனுக்கு ஆட்சி நிர்வாகத்தை பற்றி கருத்தும் ஆலோசனையும் சொல்ல உரிமை உண்டு அந்த வகையில் கடந்த மார்ச் மாதத்தில்ஊழல் இல்லாத ராஜ்யம் உருவாக மக்கள் உரிமை வென்றிட ஒரு ஆலோசனை கட்டுரையாக, "வேண்டும் ஒரு மக்கள் தொடர்பு துறை" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இந்நேரம்.காமில் எழுதினேன்.

                     இக்கட்டுரை வெளியானபோது 'இது ஒரு நல்ல ஆலோசனை' என்று சிலரும், 'தான் ஒரு அறிவாளியாக நினைத்து உளறுவதாக' சிலரும் கட்டுரையை படித்து கருத்து சொன்னார்கள். கட்டுரை எழுதிய எனக்கும் கருத்து சொன்ன வாசகர்களுக்கும் தமிழக அரசு பதில் சொல்லி விட்டது. அதாவது கடந்த வாரம் அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்,

                     "ஆறு கோடி செலவில் மக்கள் தொடர்பு மையம் உருவாக்க படும்; அதில் மக்கள், அரசு சார்ந்த எந்த விசயத்தையும் விளக்கம் கேட்கலாம்; விண்ணப்பம் பெறலாம்; புகார் அளிக்கலாம்; புகாரின் நிலையை தெரிந்து கொள்ளலாம்" என்பதாகும். மிக அருமையான திட்டம்! அரசுக்கு நன்றி சொல்லும் அதே நேரத்தில் மீண்டும் சில கருத்தை சொல்ல விரும்புகிறேன்.

                       தானே புயல் பாதிக்கப்பட்ட இடம் முழு நிவாரணம் பெறாத நிலையில், அரசு அலுவலக கட்டிடங்கள் சிதிலம் அடைந்து அபாயநிலையில் இருக்கும் நிலையில், நிதி பற்றாகுறையால் புதிய குடும்ப அட்டை வழங்கப்படாமல் காலநீட்டிப்பு செய்து கொண்டு இருக்கும் நிலையில், தமிழகத்தின் பல கிராமங்களில் உடைந்த பாலங்கள் இருக்கும் நிலையில், இன்னும்  கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் அணிவகுத்து நிற்கும் நிலையில் எம்.ஜி.ஆர், அண்ணா சமாதியைப் புதுப்புக்க ஒன்பது கோடி, பெண் சட்டபேரவை உறுப்பினருக்கு ஏழு கோடியில் ஜிம் வசதி என்று அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.

                         ஆனால்  மக்கள் பிரச்சனைக்கு சிம்ம சொப்பனமாக இருக்க போகும் மக்கள் தொடர்பு மையம் உருவாக்க ஆறு கோடி என்பது குறைவுதான், காரணம் முழுக்க முழுக்க கணினி தொழில்நுட்பம் கொண்டு செயல்பட வேண்டும். சரி பரவாயில்லை ஒதுக்கியதை வைத்து திருப்தி கொள்வோம்,
                                         அதேநேரத்தில் அரசுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்:
                            தற்போது மாவட்ட ஆட்சியரிடம் ஒரு குறையை முன்வைத்தால் அதை சரிசெய்ய முப்பது நாள் அவகாசம் வழங்கபடுகிறது, இதை  தற்போதைய புதிய மக்கள் தொடர்பு மையத்தில் ஒரு வாரத்தில் சரிசெய்ய வேண்டும்; எந்த காரணத்தை கொண்டும்(நிதி உள்பட)இந்த திட்டம் கை விடபடக் கூடாது.
- கலீல், வீரசோழன்

  
www.inneram.com  11.02.2012