என்னை தொட்டவர்கள் !

5 மே, 2012

அஹ்மதியாக்களை முஸ்லீம்கள் அல்ல என்று அரசு அறிவிக்க கோரும் முப்தி


காஷ்மீர் : அஹ்மதியாக்களை அரசு முஸ்லீம்கள் அல்ல என்று அறிவிக்கும் வகையில் சட்டம் இயற்ற  வேண்டும் என்று காஷ்மீரின் முப்தி ஆஜம் (தலைமை மதகுரு) முப்தி முஹமது பஷிர் உத்தீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் நடந்த ஜம்மு காஷ்மீர் முஸ்லீம் தனிநபர் வாரியத்தின் கூட்டத்தில் இக்கோரிக்கையை முப்தி முஹமது பஷீர் உத்தீன் கோரிக்கை விடுத்துள்ளார். காஷ்மீரில் அஹமதியாக்கள் பாமர முஸ்லீம்களிடத்தில் தவறான கருத்துக்களை முஸ்லீம்கள் மத்தியில் பரப்புவதாக தன்னிடம் மத தலைவர்கள் கூறியதாக கூறிய முப்தி இதை தடுக்கவே காஷ்மீர் சட்டசபையில் அஹ்மதியாக்களை முஸ்லீம்கள் அல்ல என அறிவிக்கும் சட்டத்தை கொண்டு வர வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதாக கூறினார்.

உலகின் எல்லா பாகங்களிலும் காதியானிகள் என்று அழைக்கப்படும் அஹ்மதியாக்கள் முஸ்லீம்கள் அல்ல என்று அறிவிக்கப்பட்டு இருப்பதாக கூறிய முப்தி ஜுல்பிகார் அலி புட்டோவின் காலத்தில் பாகிஸ்தானில் அஹ்மதியாக்கள் அவ்வாறு அறிவிக்கப்பட்டதாக கூறினார்.
19வது நூற்றாண்டில் பஞ்சாபில் உள்ள காதியான் எனும் ஊரை சார்ந்த மிர்சா குலாம் அஹ்மது (1835 - 1908) என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட அஹ்மதியா இயக்கம் முஸ்லீம்களின் தூதராகிய முஹம்மதுவுக்கு பின் தான் வாக்களிக்கபட்ட மஹதி என்று கூறி புதிய கொள்கையை உருவாக்கியது. மேலும் வெள்ளையர்களுக்கு எதிராக முஸ்லீம்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்திய போது ஜிஹாது கூடாது, பிரிட்டிஷாருக்கு கட்டுபடுவது கடமை என்று கூறியதால் பிரிட்டிஷாரின் செல்லப்பிள்ளையாக விளங்கியமையும் குறிப்பிடத்தக்கது.