என்னை தொட்டவர்கள் !

28 செப்டம்பர், 2011

முஸ்லிம் கூட்டமைப்புடன் கூட்டணி: திருமாவளவன்


சென்னை, செப்.28: முஸ்லிம்கள் கூட்டமைப்புடன் கூட்டணி வைத்து, இந்த உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கவுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள், மதுரை, நெல்லை, சேலம், வேலூர், தூத்துக்குடி, திருப்பூர் ஆகிய மாநகராட்சி மேயர் பதவிகளுக்குப் போட்டியிடும் என்று தெரிவித்தார். பாமக தனித்துப் போட்டியிடுவதாக ஏற்கெனவே அறிவித்து விட்டனர். எனவே நாங்கள் பாமகவுடன் கூட்டணிக்கு முயற்சி செய்யவில்லை. அதுபோல் மதிமுகவுடனும் கூட்டணிக்கு சில காரணங்களால் முயற்சி செய்யவில்லை என்றார் திருமாவளவன்.

27 செப்டம்பர், 2011

முஸ்லிம்களின் குறைகள் விரைவில் சரிசெய்யப்படும் : மம்தா உத்திரவாதம்


மேற்கு வங்காளத்தில் முஸ்லிம்களின் குறைகள் விரைவில் சரிசெய்யப்படும் : மம்தா உத்திரவாதம் 

மம்தா பானர்ஜி முதலமைச்சராக பதவியேற்ற பின் முதல் முறையாக முஸ்லிம்கள் அடங்கிய குழுவை சந்தித்தார். அப்போது முஸ்லிம்கள் வைத்த கோரிக்கைகள் கல்வி, இட ஒதுக்கீடு மற்றும் வேலை வாய்ப்பு பற்றி இருந்தது. மேலும், அவர்கள் ராஜரட், டைமண்ட் ஹார்பர், கோனா எக்ஸ்பிரஸ், எல்.ஐ.ஜி மற்றும் எம்.ஐ.கி மனைகளில் முஸ்லிம் சமுதாயத்தினர் அமர்த்தப்பட வேண்டும் என்றும், மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு தனி அமைச்சர் ஏற்படுத்தப்பட்டால் தங்கள் குறைகளை எளிதில் சேர்க்க வசதியாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

அதற்கு முதலமைச்சர் மம்தா, அமைச்சர் நூருல் ஹக்கின் செயலாளரை சந்திக்கும் படியும், மேலும் மாநில அமைச்சர் ஜாவித் அஹ்மத் கான் உங்கள் கோரிக்கைகள் பற்றி கையாள்வர் என்றும், தேர்தல் காரணமாக என்னால் எந்த வித முடிவும் எடுக்க இயலாது என்றும் தெரிவித்தார். அதேவேளையில் உங்கள் கோரிக்கைகளையும், குறைகளையும் வெகு விரைவில் சரிசெய்யப்படும் என்றும் உத்திரவாதம் கொடுத்தார்.

10 செப்டம்பர், 2011

டில்லி குண்டுவெடிப்பு: அப்சல் குரு கண்டனம்



புதுடில்லி: "டில்லி குண்டுவெடிப்பு சம்பவம் காட்டுமிராண்டித் தனமானது' என, பார்லிமென்ட் தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு, கண்டனம் தெரிவித்துள்ளார்.

டில்லி ஐகோர்ட் வளாகத்தில், கடந்த புதன் கிழமை குண்டுவெடித்தது. இந்த பயங்கர சம்பவத்தில், 13 பேர் பலியாகினர்; 60க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தையடுத்து, போலீஸ் அதிகாரிகளுக்கு இ -மெயில் ஒன்று வந்தது. "ஹர்கத் -அல்- ஜிகாத்' என்ற அமைப்பு எழுதியிருந்த அந்த இ- மெயில் கடிதத்தில், குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தாங்கள் பொறுப்பேற்பதாகவும், பார்லிமெண்ட் தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி இந்த சம்பவத்தை நிகழ்த்தியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பார்லிமெண்ட் தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு, தனது வழக்கறிஞர் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: டில்லி ஐகோர்ட்டில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது. அது கோழைகளின் நடவடிக்கை. அப்பாவிகளை கொல்ல வேண்டும் என்று எந்த மதமும், யாருக்கும் அனுமதியளிக்கவில்லை. இந்த சம்பவத்தில், எனது பெயர் தேவையில்லாமல் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மனதில் என்னைப் பற்றி தவறான எண்ணம் விதைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1 செப்டம்பர், 2011

கோகோ- கோலா முஸ்லிம்களுக்கு "ஹராம்"

125 ஆண்டுகளுக்கு பிறகு கோகோ-கோலாவின் பார்முலா ரகசியம்இணையதளம் மூலமாகவும், ரேடியோ மூலமாகவும் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் பிரபல குளிர்பானம் கோகோகோலா. கடந்த 1886-ம் ஆண்டு முதன் முதலில் இது தயாரிக்கப்பட்டு விற்பனையானது. அட்லாண்டாவில் மட்டும் விற்கப்பட்ட இந்த குளிர்பானம் தற்போது உலகம் முழுவதும் உள்ள 200 நாடுகளில் வினியோகிக்கப்படுகிறது.

நாள் ஒன்றுக்கு 160 கோடி பாட்டில் கோகோகோலா பானம் சப்ளை செய்யப்படுகிறது. இதற்கான பார்முலா ஜான் பெம்பர்டன் என்ற மருந்தாளுனர் கண்டுபிடித்தார். அன்று முதல் இன்று வரை அது மிகவும் பரம ரகசியமாகவே இருந்து வருகிறது.

எனினும் "காபைன் கலந்த இயற்கை சுவை கூட்டல்" பொருட்கள், சர்க்கரை, தண்ணீர், நிறமிகள் என்று மட்டுமே கோலாவில் அச்சிடப்படும். அந்த இயற்கை சுவை கூட்டலில் என்ன பார்முலா என்பது ரகசியம்.

இந்த நிலையில் அதில் என்னென்ன பொருட்கள் கலக்கப்படுகிறது என்ற தகவல் 125 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளியாகியுள்ளது. இந்த பார்முலா ரகசியத்தை அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு ரேடியோ தெரிவித்துள்ளது. அதன் நிகழ்ச்சி ஒரு இணையதளத்திலும் வெளியாகி உள்ளது.

கோகோ-கோலா தயாரிப்பதற்கான பொருட்களை 2 தொழிலாளர்கள் மட்டும் தயாரித்து வந்ததாகவும் அவர்கள் மூலம் வெளியாகி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த பார்முலா எழுதப்பட்ட காகிதத்தை அமெரிக்க வங்கி லாக்கரில் பாதுகாக்கிறது கோலா நிறுவனம்.

ஏற்கனவே 1979 ல் ஜார்ஜியா மாநில உள்ளூர் நாளிதழ் ஒன்றில் இது வெளியானதாக தெரிகிறது. ஆனால் இப்போது இருப்பது போல கோகாகோலாவின் புகழ் அப்போது பெரிதாக இல்லை என்பதால் அந்த செய்திக்கு முக்கியத்துவம் இல்லாமல் போனது.

அந்த இணையத்தளம் வெளியிட்டுள்ள கோக கோலா உற்பத்தி பார்முலா இவைதான்.

Fluid extract of Coca 3 drams USP.
Citric acid 3 oz .
Caffeine 1oz .
Sugar 30 (it is unclear from the markings what quantity is required).
Water 2.5 gal.
Lime juice 2 pints 1 qrt.
Vanilla 1oz .
Caramel 1.5oz or more to colour.
7X flavour (use 2oz of flavour to 5 gals syrup).
Alcohol 8oz .
Orange oil 20 drops.
Lemon oil 30 drops.
Nutmeg oil 10 drops.
Coriander 5 drops.
Neroli 10 drops.
Cinnamon 10 drops.