என்னை தொட்டவர்கள் !

10 செப்டம்பர், 2011

டில்லி குண்டுவெடிப்பு: அப்சல் குரு கண்டனம்



புதுடில்லி: "டில்லி குண்டுவெடிப்பு சம்பவம் காட்டுமிராண்டித் தனமானது' என, பார்லிமென்ட் தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு, கண்டனம் தெரிவித்துள்ளார்.

டில்லி ஐகோர்ட் வளாகத்தில், கடந்த புதன் கிழமை குண்டுவெடித்தது. இந்த பயங்கர சம்பவத்தில், 13 பேர் பலியாகினர்; 60க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தையடுத்து, போலீஸ் அதிகாரிகளுக்கு இ -மெயில் ஒன்று வந்தது. "ஹர்கத் -அல்- ஜிகாத்' என்ற அமைப்பு எழுதியிருந்த அந்த இ- மெயில் கடிதத்தில், குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தாங்கள் பொறுப்பேற்பதாகவும், பார்லிமெண்ட் தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி இந்த சம்பவத்தை நிகழ்த்தியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பார்லிமெண்ட் தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு, தனது வழக்கறிஞர் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: டில்லி ஐகோர்ட்டில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது. அது கோழைகளின் நடவடிக்கை. அப்பாவிகளை கொல்ல வேண்டும் என்று எந்த மதமும், யாருக்கும் அனுமதியளிக்கவில்லை. இந்த சம்பவத்தில், எனது பெயர் தேவையில்லாமல் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மனதில் என்னைப் பற்றி தவறான எண்ணம் விதைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.