என்னை தொட்டவர்கள் !

28 அக்டோபர், 2011

லிபியாவில் இனி ஷரீயா (இஸ்லாமிய) ஆட்சி


மிஸ்ரடா : லிபியாவில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் உடல் அமைந்துள்ள இடம் பொதுமக்கள் பார்வையிட முடியா வண்ணம் பூட்டப்பட்டுள்ளது. கடாபியின் மரணத்துக்கு பின் அங்கு என்ன வகையான ஆட்சி முறை நிலவும் என்ற சர்ச்சை இருந்து வந்தது.
இச்சூழலில் இது குறித்து கருத்து தெரிவித்த லிபிய இடைக்கால குழுவின் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல் "லிபியாவில் இஸ்லாமிய ஷரீயா சட்டங்களே இனி ஆளும்" என்றும் "அதற்கு மாற்றமான சட்டங்கள் அகற்றப்படும்" என்றும் தெரிவித்தார்.
மேலும் லிபியா ஒரு இஸ்லாமிய நாடாக இருப்பதால், "ஷரீயாவை முதன்மை சட்டமாக வைத்திருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?" என்று வினா எழுப்பிய ஜலீல் "கடாபியின் ஆட்சி முறையில் பலதார மணம் தடை செய்யப்பட்டு இருந்தது. அது ஷரீயாவுக்கு மாற்றமாக இருப்பதால் பலதாரமணத்தை தடை செய்யும் சட்டம் இன்றிலிருந்து அகற்றப்படுகிறது" என்றார்.

27 அக்டோபர், 2011

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்



ஏலக்காய் என்பது இஞ்சி செடி வகையைச் சேர்ந்தது. பச்சை நிறக் காய்களைக் கொண்டது. ஏலக்காய் பச்சை நிறத்திலும், அடர் பழுப்பு நிறத்திலும் இருக்கும். ஏலக்காய் நறுமணப் பொருளாக மட்டும் இல்லாமல், பல மருத்துவக் குணங்களைக் கொண்டதாகும். மன இறுக்கத்தைக் குறைத்து உடல் புத்துணர்ச்சி பெற ஏலக்காய் பயன்படுகிறது. பல் மற்றும் வாய் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு ஏலக்காய் நல்ல தீர்வாக அமையும். செரிமானத்திற்கு உதவும். இதனால்தான் நெய் சேர்த்து செய்யப்படும் இனிப்புகளில் அவசியமாக ஏலக்காயை சேர்ப்பார்கள். குரல் வளை மற்றும் தோல் தொடர்பான நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் ஏலக்காய்க்கு உண்டு. மலட்டுத் தன்மையைப் போக்குவதற்கும் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது.
பசியே ஏற்படுவதில்லை, சாப்பிட பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள், தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டுமென்றால், பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும். நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் இருமல் வந்து, அடிக்கடி இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும். ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே, குத்திரும்பல், தொடர் இருமல் குறையும். வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கும் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினை தான் காரணம். எனவே வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரலாம். சாப்பிடும் உணவு வகைகளில் சிறிது ஏலக்காயை சேர்த்துக் கொள்வது நல்லது. அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது.
ஏலக்காயில் உள்ள சத்துக்கள் :
இனிப்பு பண்டங்கள் செய்யும் போது வாசனைக்காக ஏலக்காயை சேர்ப்பார்கள் என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஏலக்காயில் பல்வேறு அரிய குணங்கள் உள்ளன. புரதம், நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற முக்கிய தாது உப்புகளும் ஏலக்காயில் கலந்துள்ளன. அடித்தொண்டை அழற்சி, தொண்டைக்கட்டு, உள்நாக்கில் வலி, குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக்கட்டு முதலியவற்றைக் குணப்படுத்த ஏலக்காய் பெரிதும் உதவும். ஏலக்காயும் இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.
பாலில் ஏலக்காய் சேர்த்து சுடவைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித்தேனும் சேர்த்து அருந்தி வந்தால் குழந்தைப் பேறில் ஏற்படும் குறைபாடுகள் நீங்கும். இதனை இருபாலரும் அருந்தலாம். இருவருக்குமே பலன் தரும். அதே நேரத்தில் பாலில் அதிகமாக ஏலக்காய்த்தூளைச் சேர்த்தால் மலட்டுத்தன்மை, ஆண்மைக்குறைவு அதிகரிக்கும். எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
(மாற்று மருத்துவம் ஏப்ரல் 2011 இதழில் வெளியானது)

22 அக்டோபர், 2011

கடாபி சுட்டுக் கொலை: மேற்கத்திய நாடுகள் வரவேற்பு


ரோம்,அக்.22 - லிபியாவின் முன்னாள் அதிபர் மும்மர் கடாபி சுட்டுக்கொலை செய்யப்பட்டதை மேற்கத்திய நாடுகள் வரவேற்றுள்ளன. லிபியாவில் 42 ஆண்டுகள் அதிபராக இருந்த மும்பர் கடாபி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பதவியை துறந்து தலைமறைவானார். அவர்,வெளிநாட்டிற்கு தப்பியோடி இருக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் அவர் தனது சொந்த நகரான சிர்டேவில் மறைந்திருப்பது தெரியவந்தது. அவரை எதிர்ப்பாளர்கள் சுட்டனர். உடனே அருகில் இருந்து குழாய்க்குள் ஓடி ஒளிந்தார். அப்போதும் அவரை எதிர்ப்பாளர்கள் சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த கடாபி மரணமடைந்தார். அவரது உடலை எதிர்ப்பாளர்கள் தூக்கிச்சென்றுவிட்டனர். 
முன்னாள் அதிபர் கடாபி சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு மேற்கத்திய நாடுகள் வரவேற்றுள்ளன. கடாபியின் மரணமானது சர்வாதிகாரம், பாஷிச ஆட்சி முறை,ஏதேச்சதிகாரம் ஆகியவைகளுக்கு முடிவு ஏற்பட்டுள்ளதோடு வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் போர் முடிவுக்கும் வந்துள்ளது என்று கூறியுள்ளனர். கடாபி கொல்லப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதின் மூலம் லிபியாவில் சர்வாதிகாரத்திற்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது என்று அந்த நாட்டு தற்காலிக ஆட்சிமன்ற குழு கருத்து தெரிவித்துள்ளது. கடாபி சுட்டுக்கொலை செய்யப்பட்டதின்மூலம் லிபியாவில் போர் முடிவுக்கு வந்துள்ளது என்று இத்தாலி நாட்டு பிரதமர் சல்வியோ பெர்லுஸ்கோனி கருத்து தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் இத்தாலியின் காலனி நாடாக லிபியா இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடாபி கொல்லப்பட்டதன் மூலம் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது என்று மேற்கத்திய நாடுகள் இடம் பெற்றுள்ள ஐரோப்பா யூனியன் தெரிவித்துள்ளது. கடாபி கொல்லப்பட்டதின் மூலம் லிபியாவில் முதல் கட்ட புரட்சி முடிவுக்கு வந்துள்ளது என்று அமெரிக்காவின் மூத்த பாராளுமன்ற உறுப்பினர் ஜான் மிக்சியன் கூறியுள்ளார்.

சித்திபேட்டில் குர்ஆன் அவமதிப்பு: நீதி விசாரணை நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை


ஹைதராபாத் 11 அக்டோபர், 2011: ஆந்திர மாநிலம் மேடக் மாவட்டத்தில் சித்திபேட் என்கின்ற ஊரில் சில கயவர்களால் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆன் அவமதிக்கப்பட்டுள்ளது. இதனை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய செயலை கண்டிக்கும் விதமாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுபான்மை முஸ்லிம்கள் இளைஞர்களை தடியடி நடத்தி போலீஸார் கலைத்துள்ளனர். இது தொடர்பாக உடனே நீதி விசாரணை நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் மாநில அரசை வலியுறுத்துகிறது.
கடந்த சனிக்கிழமை 8ஆம் தேதி அன்று துர்கா சிலை வழிபடுதலின் போது சில வகுப்புவாத சக்திகளால் திருக்குர்ஆன் அவமதிக்கப்பட்டுள்ளது. அடுத்த நாள் காலையில் அந்த பகுதி முஸ்லிம்கள் தெருவோரங்களில் குர்ஆனி பக்கங்கள் கிழிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியுற்றனர். முந்தைய இரவில் நடந்த பண்டிகையின் போதுதான் சில கயவர்கள் இவ்வாறு செய்துள்ளார்கள் என்பதை அறிந்து கொண்ட முஸ்லிம்கள், நீதி வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக தடியடி நடத்தி கலைத்துள்ளனர்.


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கர்நாடக மாநில பொதுச்செயலாளர் டி.எஸ். ஹபீபுல்லாஹ் அவர்கள் கூறும்போது சில முஸ்லிம் இளைஞர்கள் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிடும் என்று சொல்லி கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் என்று கூறினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குர்ஆன் அவமதிக்கப்பட்டதையும் அதே சமயம் நீதிக்காக போராடிய மக்களை தடியடி நடத்தி கலைத்ததையும் வன்மையாக கண்டிக்கிறது என பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ஹபீபுல்லாஹ் தெரிவித்தார். நீதி, அமைதி, சமூக நல்லிணக்கம் ஆகியவற்ற மாநிலத்தில் பேணப்படுவதற்கு முதலைமைச்சர் கிரண் குமார் ரெட்டி தவறிவிட்டார். இதே போன்ற செயல்கள் அடோனியிலும் நடைபெற்றதன் மூலம் தெளிவாகிறது.

அத்வானியின் நடத்த இருக்கின்ற ரதயாத்திரையை முன்னிட்டு வகுப்புவாத சக்திகள் பதற்றத்தை ஏற்படுத்தவே இவ்வாறு செய்துள்ளனர். அத்வானியின் ரதயாத்திரை அக்டோபர் 19ம் தேதி அன்று இந்தப்பகுதியில் வர இருப்பதாக கூறப்படுகிறது. எனவே மாநில அரசு உடனே தலையிட்டு உடனே நீதி விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்துகிறது." இவ்வாறு கூறினார்.

4 அக்டோபர், 2011

இஸ்லாமிய பயங்கரவாதம்: சுவாமி மீது தில்லி போலீஸ் வழக்கு


புதுதில்லி, அக்.4: ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமிக்கு எதிராக தில்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்திய பத்திரிகையொன்றின் எடிட்டோரியலில் இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து எழுதியது தொடர்பாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரு சமூகத்தினரிடையே விரோதத்தைத் தூண்டியதாக இந்திய தண்டனைச் சட்டம் 153ஏ பிரிவின்கீழ் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுவாமி கூறுகையில் அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஜூலையில் அந்த கட்டுரையை நான் எழுதினேன். முதல் தகவல் அறிக்கை அக்டோபரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் உள்நோக்கம் 2ஜி ஊழலாகத்தான் இருக்கும் என்றார் அவர்.