என்னை தொட்டவர்கள் !

11 மே, 2011

மே மாதம் 21 ஆம் தேதி உலகம் அழியப்போகிறது!


அமெரிக்காவில் ஹெரால்டு கேம்பிங்  என்ற பொறியாளர் ஒருவர் தற்போது மத போதகராக மாறி மக்களிடமே நன்கொடை  வாங்கி சுமார் 120 மில்லியன் டாலருக்கு மேல் பொருளாதார பலத்தில் நாடெங்கும் 66 வானொலி நிலையம் நடதிகொண்டு இருக்கின்றார். இவர் தனது வானொலியில், "மே மாதம் 21 ம் தேதி உலகம் அழியபோகிறது" என்று குண்டு ஒன்றைத் தூக்கிப்போட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதில் வேடிக்கை என்னவென்றால், அவரின் தர்க்கவாதங்கள் ஏதுமில்லாத இந்தச் செய்தியை அவரது வானொலி ரசிகர்கள் அப்படியே நம்புகிறார்கள் என்பதுதான். கிருஸ்துவ மதத்தைப் பரப்பும் நோக்கில் மிஷனரிகள் உலகம் எங்கும் பல மத போதகர்களை நடமாட விட்டு இருக்கிறது. உலகம் இன்று அழியப்போகிறது, நாளை அழியப்போகிறது என கதைவிடும் இம் மாதிரியான மத போதகர்களின் ஒரே நோக்கம், எத்தனை நபர்களின் மனதில் கிருஸ்துவத்தை பற்றி சிந்திக்கவைதோம் என்பது மட்டும்தான்.
நமது போதனைகள், பிரச்சாரங்கள் யாரையெல்லாம் அதிருப்தி அடைய செய்திருக்கிறது; யாரையெல்லாம் குழப்பம் அடைய செய்திருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் அவர்கள் சற்றும் அலட்டிக்கொள்வதில்லை.
லண்டனின் மேற்கு பகுதியிலுள்ள குறைடன் நகரில் சில ஆண்டுகளுக்கு முன் நான் குடியிருந்த காலத்தில், ஒருநாள்  நான் இரவுநேர வேலை பார்த்துவிட்டு அசந்துத் தூங்கி கொண்டிருந்தேன். அங்கு அதிகாலை ஆறு மணிக்கெல்லாம் போஸ்ட் மென் சேவை ஆரம்பம் ஆகிவிடும். எனவே, அழைப்பு மணி அடித்தது போஸ்ட் மேனாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் மிக அவசரமாக போய்க் கதவைத் திறந்தேன். போஸ்ட்மேன் இல்லை, கறுப்பர் இனத்தைச் சார்ந்த ஒருவர் அங்கு நின்று கொண்டிருந்தார். கதவைத் திறந்தவுடன், எனக்குக் காலை வணக்கம் கூறிய அவர், உடனேயே கையிலிருந்த பைபளின் ஒரு பக்கத்தைத் திறந்து படிக்க ஆரபித்தார்.
எனக்கு நடப்பது புரிந்து விட்டது. "பைபிள் படிப்பது உங்கள் உரிமை; அதே நேரத்தில் அதை நான் கேட்கும் சூழ்நிலையில் இல்லை, மேலும் இதனைக் கேட்பதையும் நான் விரும்பவில்லை" என்றேன். உடனே அவர் படிப்பதை நிறுத்திவிட்டு நன்றி கூறியவராக சென்றுவிட்டார்.
இதனை ஏனிங்குக் கூறுகிறேன் என்றால், நேரம் காலம் என்பதெல்லாம்கூட பார்க்காமல் மதத்தைப் பரப்பத் திரியும் இது போன்ற மிஷனரிகள், ஒருவரின் முன்னிலையில் சென்று அவரின் அனுமதி பெறாமலேயே இவ்வாறு பைபிளைத் திறந்து படிக்க ஆரம்பிக்கும் போது, முன்னால் இருப்பவரின் மன நிலை எப்படி மாறு என்பதெல்லாம் பற்றி சிறிதும் சிந்திப்பதில்லை. அவர்கள் நோக்கம் மட்டும் நிறைவேற வேண்டும். அவர்களுக்கு வழங்கப்பட்ட போதனை அப்படியோ என்னோவோ?!
இப்போது, சகோதரர் ஹெரால்டு கேம்பிங் அவர்கள் தன் வானொலியில் பைபிள் கூறுவதாக கூறி அறிவித்துள்ள இந்த உலகம் அழியப்போகிறது செய்தியும் இது போன்ற ஒரு வகையே!  அவருக்கும் அவர் அறிவித்துள்ளதை அப்படியே நம்பியிருக்கும் அவரின் ஆதரவாளர்களிடமும் ஒன்றைக் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்: "உங்கள் கருத்தில் நீங்கள் வலுவாக இருந்து கொள்ளுங்கள். அதே நேரத்தில் நீங்கள் குறிப்பிட்ட அந்த நேரத்தில் உலகம் அழியாது என்று சொல்பவர்களும் உங்கள் நாட்டிலும் பிற பல நாடுகளிலும் இருக்கிறார்களே, அவர்களிடம் உங்கள் 66  வானொலி நிலையங்களையும் கொடுத்துவிட்டு நீங்கள் சொன்ன உலக அழிவு நாள் மே 21, 2011 / மாலை 6  மணிக்காக காத்து இருக்கலாமே! உங்களால் முடியுமா? நிச்சயமாக முடியாது.
இப்போது நாம்எதிர் பார்ப்பது எல்லாம் அந்த மே 21  ம் தேதி உலகம் அழியாத நிலையில் உங்களை நம்பிய மக்களிடம் என்ன சமாதானம் நீங்கள் சொல்லபோகிறீர்கள் என்பதற்குத்தான்!
காலம் பதில் சொல்லும்; காத்து இருப்போம் நாமும்!
- கலீல், வீரசோழன்.

7 மே, 2011

அமெரிக்கா ஒரு ரவுடி நாடு:பாப்புலர் ஃப்ரண்ட்



புது டில்லி : உசாமா பின் லேடன் படுகொலையின் மர்மம் இன்னும் அகலவில்லை.செய்திகள் பெற ஒரே வழியாக மூலமாக அமெரிக்க ஊடகங்கள் மட்டுமே இருக்கும் வரை இந்த மர்மம் தொடரும். கிடைத்த செய்திகளை வைத்து பார்க்கும் போது, பலகீனமான நாடுகளின் மீது தனது மேலாதீக்கத்தை செலுத்தவும், வெட்கமேயில்லாமல் சர்வதேச சட்டங்களை மீறுவதிலும் பொதுவான நாகரீகமான நடைமுறைகளை பின்பற்றாமல் இருப்பதிலும் தான் நம்பர் ஒன் ரவுடி என்பதை மீண்டும் அமெரிக்கா நிரூபித்துள்ளது.
அமெரிக்க ஊடகங்கள் இடைவிடாத பிரச்சாரம் மற்றும் செய்திகளை பூதகரமாக்கி வெளியிடுவது என்ற போதிலும் நமக்கு தெரியவரக்கூடிய உண்மை, பென்டகன் மற்றும் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டதில் மூளையாக செயல்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்ட உசாமா பின் லேடனை சர்வதேச தீர்ப்பாயம் (நீதிமன்றம்) அல்லது சௌதி அரேபியா கத்தார் ஆகிய நாடுகளிடம் விசாரணைக்காக ஒப்படைத்துவிடுகிறோம் என்று 2001 ஆம் ஆண்டிலேயே தாலிபன்கள் முன்வந்துள்ளனர் என்பதும் அதனை அமெரிக்கா மறுத்ததோடு மட்டுமில்லாமல் முதலில் ஆப்கானிஸ்தானையும் பின்னர் இராக் ஆகிய நாடுகளின் மீதும் படையெடுத்து லட்சக்கணக்கில் மக்களை கொன்று, பலரை முடமாக்கி அழித்தது, தீவிரவாத்த்திற்கெதிரான போர் என்று தவறாக பெயரிட்டு கணக்கேயில்லாமல் பல அப்பாவி பச்சிளங்குழந்தைகளை ஆதரவற்ற அனாதைகளாக்கியுள்ளது என்பதும் நமக்கு தெரியவந்துள்ளது.
அமெரிக்கா பிற நாடுகளின் இறையாண்மையை துச்சமென மதிக்க கூடியது சர்வதேச விதிமுறைகள் நடைமுறைகளையும், சிவில் மற்றும் மனிதஉரிமைகளை மீறி பல இடங்களில் சட்டத்திற்கு புறம்பான பல சிறைச்சாலைகளை (கான்சன்டிரேசன் கேம்ப்) நடத்திவருகிறது. குவான்டனாமோ பே எனுமிடத்தில் மட்டும் சுமார் 200 பேர் விசாரணையில்லாமல் பல வருடங்களாக மிருகங்கள் அடைத்து வைக்கப்படும் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவருகிறது.
சிஐஏ சேவை செய்யும் நாடுகளில் இரகசிய சிறைக்கொட்டடிகளை (டிட்டேன்சன் கேம்ப்) நிர்மாணித்து சித்திரவதை சேவைகளை செய்துவருவதும் தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

இறந்த உடலை கடலில் எறிவதென்பது நாகரீகமானதல்ல மத ஒழுங்கு மற்றும் நாகரீக வரம்புகளை மீறிய செயல். பல மதங்களிடமிருந்தும் ஆதரவை பெற்றுவருவதாக பராக் ஒபாமா கூறிக்கொண்டாலும் தற்போது அவை முஸ்லிம் உலகை வன்முறையை தூண்டச் செய்யும் கருவியாகதான் பயன்படுகிறது என்பது தெரியவருகிறது

எனினும் உசாமா பின் லேடன் கொலைக்கு பிறகு உசாமாவை தேடுகிறோம் என்று ஆப்கானிஸ்தானிலும் இராக்கிலும் இனிமேலும் தங்க இவர்களுக்கு அருகதையில்லை.
இந்த நவீன காலனியாதீக்க சக்திகள் ஒரு சதாம் ஹுஸைன் அல்லது ஒரு உசாமாவை கொல்வதன் மூலம், அந்நிய ஆதீக்க சக்திகளின் கொள்ளை சுரண்டல் மற்றும் ஆக்கிரமிப்பு படையெடுப்புக்கு எதிரான மண்ணின் மைந்தர்களின் எதிர்ப்பை முடிவுக்கு கொண்டுவரலாம் என்று நினைத்தால் அது முட்டாள்தனமானது. 
வரலாற்றை ஆதாரமாக கொண்டால் நமக்கு தெரியவருவது, ஆக்கிரமித்திருக்கும் வெளிநாட்டினர் தங்களை காப்பாற்றிக்கொள்ள வீட்டுக்கு ஓடி செல்லும் வரை, ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பகுதிகளில் மக்களின் எதிர்ப்பு ஓயாது தொடரும் என்று தெரியவருகிறது. 
எல்லா வகை தீவிரவாத்த்தையும் கண்டிப்பதோடு, அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடும் வல்லரசு நாடுகளின் மேலாதீக்கம் தோற்கடிக்கப்படும், எல்லா நாடுகளின் இறையாண்மையும் சுதந்திரமும் சமமாக பாதுகாக்கப்படும், அதன் மூலம் உலகம் அமைதியான சகாப்த்தம் நோக்கி வழிநடத்தப்படும் என்பதே மனிதகுலத்தின் சார்பாக எமது ஆழ்ந்த நம்பிக்கை என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம் அப்துல் ரஹிமான் பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளார்