என்னை தொட்டவர்கள் !

11 மே, 2011

மே மாதம் 21 ஆம் தேதி உலகம் அழியப்போகிறது!


அமெரிக்காவில் ஹெரால்டு கேம்பிங்  என்ற பொறியாளர் ஒருவர் தற்போது மத போதகராக மாறி மக்களிடமே நன்கொடை  வாங்கி சுமார் 120 மில்லியன் டாலருக்கு மேல் பொருளாதார பலத்தில் நாடெங்கும் 66 வானொலி நிலையம் நடதிகொண்டு இருக்கின்றார். இவர் தனது வானொலியில், "மே மாதம் 21 ம் தேதி உலகம் அழியபோகிறது" என்று குண்டு ஒன்றைத் தூக்கிப்போட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதில் வேடிக்கை என்னவென்றால், அவரின் தர்க்கவாதங்கள் ஏதுமில்லாத இந்தச் செய்தியை அவரது வானொலி ரசிகர்கள் அப்படியே நம்புகிறார்கள் என்பதுதான். கிருஸ்துவ மதத்தைப் பரப்பும் நோக்கில் மிஷனரிகள் உலகம் எங்கும் பல மத போதகர்களை நடமாட விட்டு இருக்கிறது. உலகம் இன்று அழியப்போகிறது, நாளை அழியப்போகிறது என கதைவிடும் இம் மாதிரியான மத போதகர்களின் ஒரே நோக்கம், எத்தனை நபர்களின் மனதில் கிருஸ்துவத்தை பற்றி சிந்திக்கவைதோம் என்பது மட்டும்தான்.
நமது போதனைகள், பிரச்சாரங்கள் யாரையெல்லாம் அதிருப்தி அடைய செய்திருக்கிறது; யாரையெல்லாம் குழப்பம் அடைய செய்திருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் அவர்கள் சற்றும் அலட்டிக்கொள்வதில்லை.
லண்டனின் மேற்கு பகுதியிலுள்ள குறைடன் நகரில் சில ஆண்டுகளுக்கு முன் நான் குடியிருந்த காலத்தில், ஒருநாள்  நான் இரவுநேர வேலை பார்த்துவிட்டு அசந்துத் தூங்கி கொண்டிருந்தேன். அங்கு அதிகாலை ஆறு மணிக்கெல்லாம் போஸ்ட் மென் சேவை ஆரம்பம் ஆகிவிடும். எனவே, அழைப்பு மணி அடித்தது போஸ்ட் மேனாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் மிக அவசரமாக போய்க் கதவைத் திறந்தேன். போஸ்ட்மேன் இல்லை, கறுப்பர் இனத்தைச் சார்ந்த ஒருவர் அங்கு நின்று கொண்டிருந்தார். கதவைத் திறந்தவுடன், எனக்குக் காலை வணக்கம் கூறிய அவர், உடனேயே கையிலிருந்த பைபளின் ஒரு பக்கத்தைத் திறந்து படிக்க ஆரபித்தார்.
எனக்கு நடப்பது புரிந்து விட்டது. "பைபிள் படிப்பது உங்கள் உரிமை; அதே நேரத்தில் அதை நான் கேட்கும் சூழ்நிலையில் இல்லை, மேலும் இதனைக் கேட்பதையும் நான் விரும்பவில்லை" என்றேன். உடனே அவர் படிப்பதை நிறுத்திவிட்டு நன்றி கூறியவராக சென்றுவிட்டார்.
இதனை ஏனிங்குக் கூறுகிறேன் என்றால், நேரம் காலம் என்பதெல்லாம்கூட பார்க்காமல் மதத்தைப் பரப்பத் திரியும் இது போன்ற மிஷனரிகள், ஒருவரின் முன்னிலையில் சென்று அவரின் அனுமதி பெறாமலேயே இவ்வாறு பைபிளைத் திறந்து படிக்க ஆரம்பிக்கும் போது, முன்னால் இருப்பவரின் மன நிலை எப்படி மாறு என்பதெல்லாம் பற்றி சிறிதும் சிந்திப்பதில்லை. அவர்கள் நோக்கம் மட்டும் நிறைவேற வேண்டும். அவர்களுக்கு வழங்கப்பட்ட போதனை அப்படியோ என்னோவோ?!
இப்போது, சகோதரர் ஹெரால்டு கேம்பிங் அவர்கள் தன் வானொலியில் பைபிள் கூறுவதாக கூறி அறிவித்துள்ள இந்த உலகம் அழியப்போகிறது செய்தியும் இது போன்ற ஒரு வகையே!  அவருக்கும் அவர் அறிவித்துள்ளதை அப்படியே நம்பியிருக்கும் அவரின் ஆதரவாளர்களிடமும் ஒன்றைக் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்: "உங்கள் கருத்தில் நீங்கள் வலுவாக இருந்து கொள்ளுங்கள். அதே நேரத்தில் நீங்கள் குறிப்பிட்ட அந்த நேரத்தில் உலகம் அழியாது என்று சொல்பவர்களும் உங்கள் நாட்டிலும் பிற பல நாடுகளிலும் இருக்கிறார்களே, அவர்களிடம் உங்கள் 66  வானொலி நிலையங்களையும் கொடுத்துவிட்டு நீங்கள் சொன்ன உலக அழிவு நாள் மே 21, 2011 / மாலை 6  மணிக்காக காத்து இருக்கலாமே! உங்களால் முடியுமா? நிச்சயமாக முடியாது.
இப்போது நாம்எதிர் பார்ப்பது எல்லாம் அந்த மே 21  ம் தேதி உலகம் அழியாத நிலையில் உங்களை நம்பிய மக்களிடம் என்ன சமாதானம் நீங்கள் சொல்லபோகிறீர்கள் என்பதற்குத்தான்!
காலம் பதில் சொல்லும்; காத்து இருப்போம் நாமும்!
- கலீல், வீரசோழன்.