என்னை தொட்டவர்கள் !

23 ஏப்ரல், 2010

பெல்ஜியத்தில் பர்தாவுக்கு தடை!

உலகின் முதன் முறையாக ஐரோப்பாவில் ஆளுங்கட்சியும்,எதிர்கட்சியும் கூட்டு சதியால் பொது இடங்களில் பர்தாவுக்கு தடை விதிக்கபட்டுள்ளது.இந்த மத விரோத போக்கு வன்மையாக கண்டிக்க தக்கது. இந்த சட்டதுக்கு உலக நாடுகளும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பது நமது கருத்து.

வீரசோழன் ஜும்மா பயான்-4

வீரசோழன் அரபி கல்லூரியின் துணை முதல்வர் இன்று அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கிய நிஹ்மத்(அருட்கொடை )தண்ணீர் பற்றி பயான் வழங்கினார்.தண்ணீரின் பயன்பாடு, தண்ணீர் சிக்கனம் பற்றி மிக விரிவாக விளக்கம் அளித்தார் .

16 ஏப்ரல், 2010

மூன்று நிமிடத்தில் நானூற்றிஇருபது கோடி அவுட் !

முழுவதும் இந்தியாவில் தயாரான ஜி .எஸ் .எல் .வி. டி (மூன்று) இரண்டாயிரம் விஞ்ஞானிகள் பதினெட்டு வருடம் கூட்டு முயற்சியில் நானுற்றி இருபது கோடியில் உருவான ராக்கெட் ஏவ பட்டது ஆனால் அல்லாஹ் அதன் வெற்றியை நாடவில்லை , அது கடலில் விழுந்தது . இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்

அருப்புக்கோட்டை ஜும்மா பயான்-3

உள்ளதை பரிசுத்த படுதுங்கள் நீங்கள் வெற்றியடைவீர்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். கல்ப் எனும் உள்ளம் சுத்தமாக இருந்தால் அனைதும் சுத்தமாக இருக்கும், அது கெட்டுவிட்டால் அனைதும் கெட்டு விடும் என்பது நபிமொழி . உள்ளதை பரிசுத்த படுத்த நிறைய பயிற்சியும், முயற்சியும் செய்யவேண்டியுள்ளது. அதில் முக்கியாமனது சீராக தொழுகையை கடைபிடிதல் , உலகவாழ்க்கையை அற்பமாக நினைத்தல், தனக்கு எது நடந்தாலும் அது அல்லாஹ்வின் புரத்தில் இருந்து உண்டாவதாக நம்புதல் மேலும் நன்மையை அடைந்தால் நன்றி கூறுதல் தீமையை அடைந்தால் பொறுமை கொண்டு அல்லாஹுவிடம் பாதுகாப்பு கோருதல் இவற்றை முதல் கட்டமாக கடைபிடிக்க முயற்சியும் ,பயிற்சியும் செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் நீங்கள் வெற்றிபெறலாம்! அல்ஹம்துலில்லாஹ் இந்த பயானின் நிறைவில் எனக்கு ஒரு பொன்மொழி நினைவுக்கு வந்தது '' நீங்கள் முடியாது என்று சொல்வதை எங்கோ யாரோ செய்து கொண்டு இருக்கிறார்கள்''

14 ஏப்ரல், 2010

(மு)பாரக் ஒபாமா!

அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு ஹிரோஷிமா,நாகஷாஹி இரட்டை நகரங்கள் அமெரிக்க அணு குண்டால் நாசமாகி போனது உலகமே அறியும், அதன் தாக்கம் இன்றும் இருப்பதாக அறிவியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள் என்பது வரலாறு நவூதுபில்லாஹ் .சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா உலகின் நாற்பத்தி ஏழு நாட்டின் அதிபர்களை அழைத்து அணு ஆயுத பாதுகாப்பு மாநாடு ஒன்றை நடத்தினார், மாநாட்டின் முக்கிய அம்சமாக அணு ஆயுதம் அதிகமாக வைத்து இருக்கும் அமெரிக்காவும் , ரஷ்யாவும் அணுஆயுதங்களை குறைப்பதாக ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியது. இங்கிலாந்தும்,பிராசும் நாட்டின் பாதுகாப்பு கருதி மறுத்துவிட்டன! அவர்களிடம் அணு ஆயுதம் அதிகம் இல்லை என்பதால் அது ஒரு குறையாக தெரியவில்லை.அந்த காலத்தில் அணு ஆயுதம் பற்றி கவலை பட்டவர்கள் ராஜாஜியும், காந்தியும் தான் அந்த வரிசையில் ஒபாமாவும் இடம்பெறுவதால் அவரை நாம் பாராட்டாமல் இருக்கமுடியாது.

வீரசோழன் தீ விபத்து! அமைச்சர் நிதி உதவி


கடந்த வாரம் வீரசோழன் நகரில் நள்ளிரவில் பெரிய தீ விபத்து நடந்தது இதில் பதினான்கு கடைகள் சேதம் அடைந்தது. இதை அமைச்சர் நேரில் பார்வையிட்டார் பிறகு தனது சொந்த நிதியில் இருந்து ஒரு லட்சத்து இருபதாயிரம் ருபாய் நிதி அளித்தார், பாதிக்கப்பட்டவர்கள் நன்றி கூறினார்கள் .

12 ஏப்ரல், 2010

சட்டபேரவையில் ஒரு உருப்படியான விவாதம்!

அரசு மருந்து கடைகள் நடத்த வேண்டும் என்று சில உறுப்பினர்கள் கூறியதாக செய்தி வந்தது அவர்கள் கேட்பது சரியாகத்தான் தோன்றுகிறது காரணம் மது கடை நடத்தும் அரசு மருந்து கடை நடத்துவது சிரமம் இல்லை. அரசு இதை பரிசீலிக்கலாம்.இலவச மருத்துவ காப்பீடு எல்லா மனிதர்களையும் சென்றடைவதில்லை, அதே நேரத்தில் மருந்து அத்யாவசிய பொருளாகிபோனது . வண்ண தொலைகாட்சி இருந்தால் போதாது மனிதனின் வாழ்வாதாரம் சிறக்க வழிசெய்ய வேண்டும் என்பது நமது கருத்து.

தன்னம்பிக்கைக்கு ஒரு சின்ன உதாரணம் !



அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோன் கென்னடி ஒரு முறை அதிபர் மாளிகையில் மக்களை சந்தித்த போது ஒரு சிறுவனிடம் கேட்டாராம் உன்னுடைய எதிர்கால திட்டம் என்ன? என்று அப்போது அந்த சிறுவன் சொன்னானாம் உங்கள் இடத்தில் நான் இருக்க வேண்டும் ! உடனே கென்னடி சிறுவனை பாராட்டியதாக வரலாறு, அந்த சிறுவன் வேறு யாரும் இல்லை அமெரிக்க அதிபராக அமர்ந்து விட்ட கிளிண்டன்தான்.கிளிண்டன் அதிபராக இருக்கும் போது கூறிய சில வரிகள் நமது நினைவுக்கு வருகின்றது
நான் மதிக்கும் மார்க்கமாக இஸ்லாம் இருக்கின்றது !
அமெரிக்காவில் இஸ்லாம் வேகமாக வளர்ந்து கொண்டுஇருக்கின்றது !!


9 ஏப்ரல், 2010

மதுரை (கட்ராபாலயம்) ஜும்மா பயான்-2

இமாம் எச்சரிக்கை!
இஸ்லாம் கல்விக்கு முக்கியதுவம் கொடுக்கும் மார்க்கமாக இருக்கின்றது, அந்த கல்வி இன்று பல வகைகளாக வருமானம் தரக்கூடியதாக,கண்ணியம் தரக்கூடியதாக,பெருமை தரக்கூடியதாக இருக்கின்றது. இதில் இஸ்லாம் சொல்லும் கல்வி இம்மையிலும்,மறுமையிலும் நன்மை தரக்கூடிய மார்க்க கல்வியாகும்.இன்று அரபி மதரசாக்களில் உலககல்வியை இணைகின்றார்கள் அதன் விளைவு மாணவர்களிடம் உள்ளதும் இல்லாமல் போய்விடும் அதாவது ஒரே நேரத்தில் இரண்டையும் கற்கும் போது கல்விதரம் குறைந்து போகும்! உலககல்வியும் இந்த காலத்தில் அவசியம்தான், ஆனால் மாணவர்கள் எதை எப்போது கற்க வேண்டும் என்று சிந்தித்து செயல்படவேண்டும் .

4 ஏப்ரல், 2010

அமெரிக்காக்கு தேவை இல்லாத வேலை!

  1. உயரமான இரட்டைகோபுரங்கள் அரை(தரை) மட்டமானது!
  2. கண்ணில்பட்டவர்களை எல்லாம் சுட்டுத்தள்ளும் மன நோயாளிகள் பெருகிவிட்டார்கள்!
  3. மிகப்பெரிய பொருளாதார சரிவு!
  4. அமெரிக்கர்களுக்கே வேலை இல்லை( அதிபரின் ஒப்புதல் வாக்குமூலம் )!
  5. முன்னாள் அதிபருக்கு செருப்படி( ஜஸ்ட் மிஸ் )
  6. இதையெல்லாம் தடுக்க முடியாத மானங்கெட்ட வல்லரசு, இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் அட்வைஸ் செய்வது என்னவென்றால்....ஆப்கனால் உங்களுக்கு ஆபத்து இருக்கு!
  7. அமெரிக்காவால் நாசமாக போனது ஈராக் இது உலகமே அறியும், இதன் அடுத்த குறி ஈரான்! அதற்க்கு இந்தியா பாக்கிஸ்தானிடம் ஆதரவு கேட்கிறது!
  8. அமெரிக்கவால் எந்த நாட்டுக்கும் ஆபத்து வரக்கூடாது என்பது தான் நமது கவலை! நவூதுபில்லாஹ் !!

2 ஏப்ரல், 2010

வீரசோழனில் ஜும்மா பயான்

மௌலவி .எம். அப்துல் காதர் பாக்கவி அவர்களின் பயானில் கூறினார்கள்....மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகள் பல அதில் மூன்று பார்பது , கேட்பது , பேசுவது . ஆனால் மனிதனாகபட்டவன் வாழும் காலத்தில் தேவைக்கு அதிகமாக இந்த மூன்றையும் பயன்படுத்துகிறான்! அதன் விளைவு அவன் மரணபடுக்கையில் இருக்கும் போது, இந்த மூன்றையும் பயன்படுத்த நினைக்கின்றான் ஆனால் முடியவில்லை, காரணம் மெளனமாக, புறம் பேசாமல், தீயதை பார்க்காமல் இருக்கவேண்டிய நேரத்தில் அவன் இருக்கவில்லை , அதாவது அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவன் வீனடிதான் அதன் பலனை மரணபடுக்கையில் உணர்கிறான். (சிந்திக்க வேண்டிய பயான் சகோதர்களே )