என்னை தொட்டவர்கள் !

20 ஜூலை, 2010

ததஜவின் ஜூலை 4 மாநாடு பற்றி...? - கலீல்

முஸ்லிம் சமுதாய மக்களுக்கு ஸச்சார் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு கேட்டு வேறு சில முஸ்லிம் அமைப்புகளும் இயக்கங்கள் நடத்தியபோதும் தமிழ்நாட்டில் ததஜவினரால் நடத்தப்பட்ட மாநாட்டில் இலட்சக்கணக்கானோர் கலந்து கொண்டதும் ததஜவின் தலைவர்கள் இந்தியப் பிரதமரைச் சந்தித்ததும் அந்தக் கோரிக்கை அரசின் செவியில் வலிமையாக விழுந்துவிட்டது என்ற நம்பிக்கையை ததஜவினருக்கு எற்படுத்தியுள்ளது. அதுவே மாநாட்டின் வெற்றி எனவும் கொள்ளலாம்.

from inneram.com

17 ஜூலை, 2010

கல்யான் சிங்குடன் கூட்டணி வைத்ததற்காக முஸ்லிம்களிடம் மன்னிப்பு : முலாயம்

பாபர்மஸ்ஜித் இடிப்பு விவகாரத்தில் முக்கியப் புள்ளியான கல்யான் சிங்குடன் கடந்த தேர்தல்களில் தொடர்பு வைத்ததற்காக முஸ்லிம்களிடம் தான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாக முலாயம் சிங் யாதவ் தெரிவித்திருக்கிறார்.
மதவாதிகளை தனிமைப் படுத்துவதற்காகவே தான் அதனைச் செய்ததாகத் தெரிவித்த முலாயம் சிங் கல்யாண்சிங் உடன் தான் வைத்த கூட்டுக்காக மன்னிப்பு கோரினார்.
2004 நாடாளுமன்றத் தேர்தல்களில் முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி 36 இடங்களில் வெற்றி பெற்றது. மாநிலக் காட்சிகளில் தனிப்பெரும் கட்சியாக விளங்கிய சமாஜ்வாதி கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கல்யான் சிங்குடன் கூட்டணி அமைத்தது அக்கட்சிக்கு சரிவை ஏற்படுத்தியது. சரிந்து போன தனது வாக்கு வங்கியை நிமிர்த்தும் முயற்சியாக முலாயம் இந்த அறிவிப்பினை வெளியிட்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்

தொலைக்காட்சி அலுவலகங்கள் மீது ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் தாக்குதல்

ஹெட்லைன்ஸ் டுடே மற்றும் ஆஜ் தக் தொலைகாட்சி அலுவலகம் மீது டெல்லியில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். மெக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு இருக்கும் தொடர்பை ரகசிய காமிரா மூலம் படம் பிடித்து, ஆஜ் தக் மற்றும் என்.டி டிவி அலைவரிசைகள் வெளியிட்டிருந்தது.
இதனால் ஆவேசம் கொண்ட ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் இத்தொலைகாட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் தொடுத்தனர்.டெல்லியில் ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் அருகே அமைந்துள்ள ஹெட்லைன்ஸ் டுடே தொலைகாட்சி அலுவலகம் மீது தாக்குதல் தொடுப்பதற்காக எஸ்.எம்.எஸ் மூலம் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இச்செய்தி கிடைத்த உடனேயே தொலைகாட்சி அலுவலகத்தினர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்து பாதுகாப்பு கோரியிருந்தனர்.
இருப்பினும் எஸ்.எம்.எஸ் கிடைத்து ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் ஒன்று கூடிய ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள், பக்கத்திலுள்ள தொலைகாட்சி அலுவலகம் மீது தாக்குதல் தொடுக்க ஆரம்பித்த போது அங்கு வெறும் 5 காவலர்களே பாதுகாப்புக்கு இருந்தனர். சுமார் 300க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள், தொலைகாட்சி அலுவலகத்தை அடித்துத் தகர்த்தனர்.
நேரடியாக ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திலிருந்தே இத்தாக்குதலுக்குத் தொண்டர்கள் திரட்டப்பட்டு, குண்டுவெடிப்புகளின் பின்னணியில் உள்ள ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதப் பின்னணியை வெளியிட்ட தொலைகாட்சி அலுவலகம் மீது தொடுக்கப்பட்ட இந்தத் தாக்குதல், பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் நடத்திய அத்துமீறல் என பத்திரிக்கை உலகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்