என்னை தொட்டவர்கள் !

23 நவம்பர், 2010

பெண்ணின் திருமண வயதை 19 ஆக குறைக்க வேண்டும்!

மு
ஸ்லிம் ஷியாப்பிரிவினர் அதிகம் வசிக்கும் ஈரான் நாட்டில் கடந்த 1979-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது அங்கு மக்கள் தொகை உயர்ந்து இருந்ததின் காரணமாக 1990-ம் ஆண்டு முதல் இங்கு குடும்ப கட்டுப்பாடு திட்டம் அமல் படுத்தப்பட்டது.
ஆண்களின் திருமண வயது 26 எனவும், பெண்களின் திருமண வயது 24 எனவும் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் அங்கு மக்கள் தொகை பெருக்கம் பெருமளவில் குறைந்தது.  இதற்கு ஈரான் அதிபர் அகமதி நிஜாத் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மக்கள் தொகை குறைந்ததால்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் குறைந்து விட்டதாக குற்றம் சாட்டினார். இது இயற்கை மற்றும் கடவுளுக்கு எதிரான செயல் என்றும் மேலை நாடுகளின் இறக்குமதி திட்டம் என்று கூறினார்.

இந்நிலையில் அவர் ஆட்சிக்கு வந்ததும் புதிய திட்டம் ஒன்றை அறிவித்தார். இனி பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசு சார்பில் ஊக்க தொகை வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், ஆண்-பெண் திருமண வயதை குறைக்கவும் வலியுறுத்தி வருகிறார். ஆண்களின் திருமண வயதை 19 அல்லது 20 ஆகவும், பெண்களின் திருமண வயதை 16 அல்லது 17 ஆக குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். 


இதன் மூலம் ஈரானின் மக்கள் தொகை கணிசமாக உயரும் எதிர்பார்க்கப்படுகிறது தற்போதைய ஈரானின் மக்கள் தொகை சுமார் 7 கோடியே 50 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

19 நவம்பர், 2010

பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொடுமை





ஒரு சகோதரர் காImageரைக்காலில் பள்ளிவாசல் கட்டுவதற்காக பூஜை நடத்தப்பட்டதை புகைப்பட ஆதாரத்துடன் அனுப்பி வைத்துள்ளார். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது குறித்து காரைக்கால் மக்களுக்கு மிகப்பெரும் கடமை உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம். காரைக்காலில் ஹில்ரு பள்ளிவாசல் கட்டுவதற்கான துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தாடியும் தொப்பியும் வைத்துக் கொண்டு இந்து மதத்தைப் பின்பற்றி பூஜை செய்துள்ளனர். அல்லாஹ்வின் பள்ளிவாசல் சிறப்பாகக் கட்ட பூமிக்கு பூஜை செய்தால் நல்லபடியாக முடியும் என்று நம்பும் இவர்களுக்கு பள்ளிவாசல் எதற்கு? பேசாமல் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய வேண்டியதுதானே ? இஸ்லாத்தின் பெயரை ஏன் கெடுக்க வேண்டும்.

காரைக்கால் மக்களுக்கு இஸ்லாத்தில் நம்பிக்கை இருந்தால் இது போன்ற முர்தத்களை பள்ளிவாசல் நிர்வாகத்தில் இருந்து நீக்க வேண்டும். இது அவர்கள் மீதுள்ள மார்க்கக் கடமையாகும்.
அல்லாஹ்வின் பள்ளியை யார் நிர்வாகிக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.
இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும். ஹாஜிகளுக்குத் தண்ணீர் வழங்கி, மஸ்ஜிதுல் ஹராமை நிர்வகிப்போரை அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைப் போல் கருதுகிறீர்களா? அவர்கள் அல்லாஹ்விடம் சமமாக மாட்டார்கள். அநீதி இழைத்த கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். திருக்குர்ஆன் 9:17,18,19
தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் ''நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை'' என்று சத்தியம் செய்கின்றனர். ''அவர்கள் பொய்யர்களே'' என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.. அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான். அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தின் மீதும், அவனது திருப்தியின் மீதும் தனது கட்டடத்தை நிர்மாணித்தவன் சிறந்தவனா? அல்லது அரிக்கப்பட்டு விழுந்து விடும் கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன் நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன் சிறந்தவனா? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். திருக்குர் ஆன் 9:107,108,109
மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் இவர்கள் பள்ளியை நிர்வாகம் செய்ய தகுதியற்றவர்களாகி விட்டனர். இவர்களைத் தூக்கி எறிவது காரைக்காலைச் சேர்ந்த ஒவ்வொரு முஸ்லிமின் மார்க்கக் கடமையாகும்.
முடியாவிட்டால் இதைப் பள்ளிவாசலாக அங்கீகரித்து உதவிகள் செய்வதை உடனே நிறுத்த வேண்டும். ஏனெனில் இது போல் இணை வைப்பின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்டவை பள்ளிவாசலே அல்ல என்று அல்லாஹ் மேற்கண்ட வசனத்தின் மூலம் தெளிவுபடுத்துகிறான்.
இதை காரைக்கால் சகோதரர்கள் பிரசுரமாக வெளியிட்டு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

கார்கில் போர் : உண்மையை வெளியிட்டு பாக்.பரபரப்பு

இஸ்லாமாபாத் : கார்கில் போரில் தங்களுக்கு நேரடி தொடர்பு இல்லை என்று கூறிவந்த பாகிஸ்தான் ராணுவம், போர் முடிவடைந்து 11 ஆண்டுகள் கழித்து, தற்போது போரில் மரணமடைந்த ராணுவ வீரர்களின் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1999ம் ஆண்டு, இந்தியா - பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் இமயமலையில் அமைந்துள்ள கார்கில் பனி சிகரத்தை ஆக்கிரமிக்கும் நோக்குடன் பாகிஸ்தான் போர் தொடுத்தது. ஆனால், இந்திய ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையால், பாகிஸ்தானின் முயற்சி தோல்வியடைந்தது. போரில் படுதோல்வியடைந்த பாகிஸ்தான் ராணுவம், தனதுதோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல், கார்கில் போரில் ராணுவத்தினர் ஈடுபடவில்லை என்றும், துணை ராணுவப்படைகள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் கட்டுக் கதை கூறி வந்தது.

இந்நிலையில், முன்னாள் ராணுவ தளபதியும், பாகிஸ்தான் அதிபருமான பர்வேஸ் முஷாரப், 2006ம் ஆண்டு தான் எழுதிய, "இன் தி லைன் ஆப் பயர்' என்ற சுயசரிதை புத்தகத்தில், கார்கில் போரில் ராணுவ வீரர்கள் நேரடியாக ஈடுபட்டதை அம்பலப்படுத்தினார். அதில், 357 ராணுவ வீரர்கள் மரணமடைந்ததாகவும், 660 பேர் காயமடைந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், கார்கில் போர் முடிந்து 11 ஆண்டுகள் முடிவடைந்து விட்டநிலையில், போரில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டதை, அந்நாட்டு ராணுவம் முதன் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. தனது இணையதளத்தில், பட்டாலிக் - கார்கில் பகுதியில் போரினால் மரண மடைந்த ராணுவ அதிகாரிகள் மற்றும் 453 ராணுவ வீரர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. அதில், மரணமடைந்த வீரர்களின் பெயர்கள், அவர்கள் மரணத்திற்கான காரணம், எந்த இடத்தில் மரணமடைந்தனர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. கார்கில் போருக்கு, "ஆபரேசன் கோ -இ- பைமா' என்று பெயரிட்டு போர் தொடுத்ததையும் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது. இந்நிலையில், கார்கில் போரில் 3,000 பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்ததாகவும், 200 பேர் பனிப்புயலில் சிக்கி மண்ணில் புதைந்து விட்டதாகவும் அந்நாட்டு எதிர்க்கட்சி கூறி வருகிறது, என்பது குறிப்பிடத்தக்க

14 நவம்பர், 2010

கொலைகாரன் புஷ் ஒப்புதல் வாக்குமூலம் !

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் தன் நினைவுகளை, அனுபவங்களை "டிஸிஷன் பாயிண்ட்ஸ்' என்ற தலைப்பில் ஒரு சுயசரிதை நூலாக எழுதியிருக்கிறார். இந்நேரம் அந்த நூல் வெளியாகியிருக்கும்.
அந்த நூலில் அவர் இதுவரை வெளியிடாத இரண்டு விஷயங்களை வெளியிட்டிருக்கிறார்.
ஒன்று, ஈராக் போர் தொடர்பானது. ஈராக் மீது அமெரிக்கா தொடுத்த போரில் தான் பல தவறுகள் செய்துவிட்டதாக புஷ் ஒப்புக் கொள்கிறார். அந்தப் போருக்கு மிக முக்கிய காரணமே, ஈராக்கில் மனிதகுல அழிவு ஆயுதங்கள் பெருமளவில் இருப்பதாக உளவுத் துறை மூலம் கிடைத்த தகவல்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த ஆயுதங்களைக் கண்டுபிடித்து அழித்து உலக மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்றுதான் அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படையெடுத்துச் சென்ற பிறகு அங்கே அப்படிப்பட்ட ஆயுதங்கள் எதையும் அமெரிக்கத் துருப்புகளால் கைப்பற்ற முடியவில்லை என்பதை தன் நூலில் புஷ் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
நான் மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு கப்பலின் கேப்டன் போல உணர்ந்தேன். அங்கே ஆயுதங்கள் இல்லை என்று உறுதி செய்யப்பட்டபோது தவறு செய்துவிட்டதாக என் மனம் வலித்தது என்று புஷ் எழுதியுள்ளார்.
இன்னொரு விஷயம். செப்டம்பர் 11 இல் இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதில் பின்னணி மூளையாகக் கருதப்பட்ட கலீத் ஷேக் முகமதை எப்படி விசாரிக்க வேண்டும் என்பது பற்றியது. விசாரிக்கும் முறையில் பல வகைகள் உண்டு. அவற்றில் வாட்டர் போர்டிஸ் என்பது ஒரு முறை. யாரை விசாரிக்கிறார்களோ அந்த ஆளை ஒரு பலகையில் கட்டி வைத்து முகத்தில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து விசாரிப்பது. பதில் சொல்லத் தயங்கினால் அல்லது தவறினால் மீண்டும் முகத்தில் தண்ணீர் பாயும். "கலீத்தை அப்படி விசாரிக்கலாமா, இது சற்று சர்ச்சைக்குரிய வன்முறை கலந்த முறையாயிற்றே என்று அமெரிக்க சி.ஐ.ஏ. அதிகாரிகள் கேட்டபோது நான் பச்சை கொடி காட்டினேன்' என்று அந்தப் புத்தகத்தில் புஷ் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

"பயங்கரவாதம்" மேட் இன் யூ எஸ் ஏ - ஹிலாரி

சில பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கியது அமெரிக்காதான் என்றும் ஒஸாமா பின்லேடன் போன்ற பயங்கரவாதிகளை அமெரிக்கா முன்னர் ஆதரித்து வந்தது என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன். ஏபிசி தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின் போது ஒப்புக் கொண்டார்.

சோவியத் யூனியனுக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்கா இவ்வாறு செய்தது. ஆனால் இவ்வாறு செய்தது அமெரிக்காவுக்கே பெரும் பிரச்சனையாகிப் போனது என்று ஹிலாரி கூறினார்.

நாம் இப்போது யாருக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறோமோ அவர்களில் ஒரு பகுதியினர் அமெரிக்காவால் உருவாக்கப்பட்டவர்கள். ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனைத் தோற்கடிப்பதற்காக முஜாஹிதீன் படையினரை நாம்தான் உருவாக்கினோம் என்றும் அவர் கூறினார்.

நாம் அவர்களுக்குப் பயிற்சி அளித்தோம்; அவர்களுக்கு ஆயுதம் வழங்கினோம்; அவர்களுக்கு நிதி உதவியும் அளித்தோம். உஸாமா பின் லேடன் உள்ளிட்ட சிலருக்கு இவை வழங்கப்பட்டன. ஆனால் இது நமக்கு ஆதரவாகச் செயல்படவில்லை என்றும் ஹிலாரி கூறினார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் போருக்கு ஆதரவு அளித்தமைக்காக பாகிஸ்தான் மிகப்பெரிய விலையைக் கொடுத்துக் கொண்டுள்ளது. "பாகிஸ்தான் தன்னுடைய நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு சில நெளிவுகளைச் செய்தது. ஆனால் அதற்காக பாகிஸ்தான் தற்போது மிகப்பெரும் விலையைக் கொடுத்துக் கொண்டுள்ளது" என்று ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.

13 நவம்பர், 2010

முஸ்லிம்களுடன் புரிந்துணர்வு நோக்கி நகர்கிறோம் - ஒபாமா



இந்திய சுற்றுப் பயணத்தை அடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தோனேசியாவில் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பெறுவதில் முதலடியை எடுத்து வைத்துள்ளதாகவும் , இதில் நீண்ட தொலைவு பயணிக்க உள்ளதாகவும் சொன்னார் . "இந்தோனேசியா என்வாழ்வில் ஓர் அங்கம் என்றார் ஒபாமா கடந்த புதன்கிழமையன்று இந்தோனேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய ஒபாமா இந்தோனேசியா என் வாழ்வின் அங்கம் என்று கூறினார் தனது சிறு வயதில் அங்கு கழித்த நாள்களை நினைவு கூர்ந்தார்.  தன் தாய் இந்தோனேசியர் ஒருவரை மறுமணம் செய்து கொண்டது குறித்தும், அதன் பின்னர் தான் இந்தோனேசியாவில் சில ஆண்டுகள் வசித்தது குறித்தும் ஒபாமா தன் பேச்சில் குறிப்பிட்டார். அதிபராக பதவியேற்ற பின்னர் ஒபாமா தன் சொந்த வாழ்க்கை குறித்து பொது மேடையில் வெளிப்படையாக அதிகம் பேசியது இப்போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியா முஸ்லிம் நாடுகள், மேற்கத்திய நாடுகள் ஆகிய இரண்டுக்குமே முன்னுதாரனமாகத் திகழ்வதாக அவர் புகழாரம் சூட்டினார். மேலும் அவர் பேசுகையில் "நீண்ட நாள்களாக சர்வாதிகாரத்தின் பிடியில் இருந்த இந்தோனேசியா இப்போது ஜனநாயக பாதைக்கு வந்துள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு இந்தோனேசியா ஓர் உதாரணமாகத் திகழ்கிறது. இங்குள்ள கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவை இந்நாட்டு மக்களின் ஒற்றுமைக்கும் சகிப்புத் தண்மைக்கும் எடுத்துக் காட்டாக விளங்குகின்றன.
என் இந்தோனேசிய வாழ்க்கையின்போது நான் பலவற்றை இங்கு கற்றுக் கொண்டேன். இங்கு படித்தபோது நானும் என், பள்ளி நண்பர்களும் ஒரு நாள் நான் அமெரிக்க அதிபராக உயர்வேன் என துளியும் எதிர்பார்க்கவில்லை. நெல்லின் மீது ஓடி விளையாடியது, பட்டம் விட்டது, பட்டாம் பூச்சி பிடித்தது போன்ற நினைவுகள் எனக்கு இப்போது வருகின்றன. இந்தோனேசியாவில் இருந்து ஒழுங்கற்ற இளைஞனாக சென்ற நான். இப்போது அமெரிக்க அதிபராக இங்கு வந்துள்ளேன்' என்றார் ஒபாமா.
முன்னதாக மத்திய ஜகார்தாவிற்குச் சென்ற ஒபாமாவும் அவரது மனைவி மிச்சேலும் தெற்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய மசூதியான இஸ்திக்லால் மசூதிக்குச் சென்றனர். அவரை வரவேற்ற இமாம் ஹாஜி முஸ்தபா அலி யாக்கூப், அந்த மசூதியின் வரலாறு, கட்டடக் கலை ஆகியவை குறித்து ஒபாமாவுக்கு எடுத்துரைத்தார். இந்த மசூதி ஒரு கிறிஸ்தவரால் வடிவமைக்கப்பட்டது என்ற தகவலையும் ஒபாமாவிடம் கூறினார் இமாம்.
அதிபர் ஒபாமாவின் ம்னைவி மிச்சேல் முழுவதுமாக உடல் மறைக்கப்பட்ட பேண்ட் மற்றும் மேல் ஆடை அணிந்து வந்திருந்தார் தலையையும் அவர் போர்த்தி வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

7 நவம்பர், 2010

ஹெலன் டேவிட்சனுக்கு எதிராகப் போராட்டம் - த.மு.மு.க.வினர் கைது!



கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த ஹெலன் டேவிட்சனுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய த.மு.மு.க.வினர் கைது செய்யப்பட்ட
னர்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி விசுவ இந்து பரிஷத் சார்பில் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த ஹெலன்டேவிட்சன் கையெழுத்திட்டதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக அவரிடம் திமுக தலைமை விளக்கம் கேட்டது. ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி தாம் கையெழுத்திடவில்லை என்றும் தம்மிடம் அளிக்கப்பட்ட மனுவிற்கு ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட்டதாகவும் டேவிட்சன் கூறினார்.

ஹெலன் டேவிட்சனிடம் மனுவில் கைöழுத்து பெறவில்லை என்று அனுமன் சக்தி அமைப்பு சார்பில் பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன் மறுத்தார். இந்நிலையில் ஹெலன் டேவிட்சன் தனது நாடாளு மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய கோரி த.மு.மு.க. சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மாநில துணைத் தலைவர் காதர்மைதீன், மாவட்ட தலைவர் பீர்முகம்மது உள்ளிட்ட நூற்றுக் கணக்கானவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

6 நவம்பர், 2010

தமது 120வது வயதில் புனித ஹஜ் பயணம் செல்லும் ராஜஸ்தான் மூதாட்டி

2014ல் NRIகளுக்கு ஓட்டுரிமை! - தேர்தல் ஆணையர் தகவல்

2014 தேர்தலின் போது வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கான வாக்குரிமை சாத்தியப்படலாம் என்று இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் டாக்டர். சலாஹுத்தீன் குரைஷி தெரிவித்துள்ளார்.
 ரியாத் மாநகரில், அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 'சர் சையது அஹமது நாள்' நிகழ்ச்சியில் பேசும்போது இத்தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
500க்கும் மேற்பட்ட அலிகர் பல்கலை. முன்னாள் மாணவர்கள், குடும்பசகிதமாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். சவூதி அரேபியாவுக்கான இந்தியத்தூதர் தல்மீஸ் அஹமது தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவின் புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் சயீத் நக்வியும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இவ்வாண்டு தொடக்கத்தில், பிரதமர் மன்மோகன்சிங் டெல்லி விழாவொன்றில் பேசுகையில் வெ.நா.இந்தியர்களுக்கான வாக்குரிமை குறித்து உறுதிபூண்டதை குரைஷி மேற்கோள் காட்டினார்.
"வெ.நா. இந்தியர்கள் அடுத்த பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்குண்டான எல்லா சாத்தியக்கூறுகளையும் தேர்தல் ஆணையம் பரிசிலீக்கும்" என்றார் தலைமை ஆணையர்.  "ஆனால், அது சொல்வதைப் போன்று எளிதான வேலையில்லை. உதாரணமாக, சவூதிஅரேபியா என்கிற ஒருநாட்டில் மட்டுமே இரண்டு மில்லியன் இந்தியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பல்வேறு தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதை மறக்கக் கூடாது"
"பாதுகாப்புத் துறையினருக்கும், வெளிநாட்டு பணியிலுள்ள அரசுயர் அதிகாரிகளுக்கும் உள்ளது போன்ற மடல்வழிவாக்குரிமை மற்றொரு யோசனை"  என்ற குரைஷி "இதுகுறித்த அனைத்து வழிமுறைகளை ஆய்ந்து தகவல் தரும்படி அயலக அமைச்சகத்தை தேர்தல் ஆணையம் கோரியுள்ளது",  என்பதையும் சொன்ன குரைஷி அயல்துறை அமைச்சகம், வெளிநாட்டுத் தூதரகங்கள், ,மேலும் குறிப்பிடத்தகுந்த வெ.நா.இந்தியர்கள் ஆகியோருடன் தேர்தல் ஆணையத்தின் அணிகள் இதுகுறித்த பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், எல்லாம் கூடிவரும் பட்சத்தில் 2014 தேர்தலில் வெ.நா இந்தியர்கள் வாக்குரிமை அடைவர்" என்றும் தெரிவித்தார்.

சபாஷ் மும்பை போலிஷ்!

மும்பை : 70களிலும் 80களிலும் அமெரிக்கா சொல்வதை எல்லாம் வியப்போடு பார்த்து கொண்டிருந்த காலம் மலையேறி விட்டது என்பதை உணர்த்துவது போல் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மும்பை வருகையையொட்டி பாதுகாப்பு விஷயங்களில் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கேட்ட மாற்றங்களை செய்து கொடுக்க மும்பை காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
எப்போதும் அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு படையே தலைமையேற்று செயல்படுத்துவது வழக்கம். ஆனால் அதை ஏற்க மறுத்த மும்பை காவல்துறை ஒபாமாவின் பாதுகாப்பு விஷயங்களை தாங்கள் பொறுப்பேற்று கொள்வதாக சொன்னதோடு ஒபாமாவின் பாதுகாப்பு அதிகாரிகள் அமெரிக்காவிலிருந்து துப்பாக்கிகளை இறக்குமதி செய்து கொள்ள அனுமதி மறுத்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநில அதிகாரிகளுடன் வெள்ளை மாநில அதிகாரிகள் தங்கள் அதிபர் வருகையின் போது வழமையான பாதுகாப்பு ஏற்பாடுகளில் கொஞ்சம் நெளிவு சுளிவோடு நடந்து கொள்வதற்காக இது வரை ஐந்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை மும்பை காவல்துறை ஏற்க மறுத்துள்ளது.
ஒபாமாவுடன் வரும் 3000 நபர்களுக்கும் சுங்க சோதனையில் சலுகை காட்டுமாறு கோரப்பட்டதாகவும் ஆனால் அனைவருக்கும் வழமையாய் செய்ய வேண்டிய எழுத்து வேலைகளை செய்யாமல் அனுமதிக்க முடியாது என்றும் சொல்லப்பட்டதாகவும் மும்பை காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விழாக்களின் உள்ளே நுழைவது , வெளியேறுவது போன்றவற்றை கட்டுபடுத்துவதும் மும்பை காவல்துறையின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என தெரிகின்றது.ஒபாமாவின் அந்தரங்க பாதுகாவலர்கள் தவிர மற்ற அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் ஆயுதம் ஏந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் மும்பை நகர காவல்துறையே இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்ததாகவும் இருக்கும் என்றும் தெரிகிறது. ஒபாமா மணி பவனுக்கு வருகை தரும் போது அருகிலுள்ள கட்டிடங்களில் இருந்து புகைப்படம் எடுக்க கூடாது என்ற கோரிக்கையை நிராகரித்துள்ள மும்பை காவல்துறை ஜனநாயக நாட்டில் ஏகப்பட்ட கெடுபிடிகளை விதிக்க முடியாது என்று சொன்னதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மும்பை வந்திறங்கினார் ஒபாமா!

அமெரிக்க அதிபர் ஒபாமா மூன்று நாள் பயணமாக சனிக்கிழமை பிற்பகல் 12.50 மணிக்கு மும்பை வந்திறங்கினார். ஒபாமாவுடன் அவரது மனைவி மிச்சேல், அமைச்சரவை சகாக்கள், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மற்றும் வணிகப் பிரமுகர்கள் 200 பேர் வந்துள்ளனர்.
அமெரிக்க விமானப்படை விமானமான ஏர் ஃபோர்ஸ் 1 விமானத்தில் வந்திறங்கிய ஒபாமாவையும் மற்றவர்களையும் மகாராஷ்டிர மாநில முதல்வர் அஷோக் சவான், மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் டிமோதி ரோமர் மற்றும் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கர் ஆகியோர் வரவேற்றனர்.
26/11 மும்பை தாக்குதல்களில் உயிர் இழந்தோருக்கு ஒபாமாவும் அவரது மனைவியும் அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்குப் பின் மும்பை தாஜ்மஹால் ஓட்டலில் தங்கும் மிக முக்கியப் புள்ளி ஒபாமா என்பது குறிப்பிடத் தக்கது.

குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது

இந்து மத வலதுசாரி பயங்கரவாதிகள் மூவர் நேற்று தீபாவளி தினத்தன்று  இரவு புனித நூல்களான குர்ஆன், பைபிள் ஆகியவற்றை பகிரங்கமாக எரித்து சாம்பலாக்க திட்டமிட்டு அறிவித்திருந்தனர். சுவிட்சர்லாந்தில் வாழும் இவர்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர்.
புனித நூல்களை எரிக்கும் அறிவிப்பைத் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இம்மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில்  முன்னிலைப்படுத்தினர்.
இம்மூவரில் பிரதானக் குற்றவாளியான  நாற்பத்திரண்டு வயதான டேட்டுஸ் பனகல் லியோ  என்பவர்  இனங் காணப்பட்டுள்ளார்.இவர்   கடந்த எட்டு வருடங்களாக சுவிட்ச்சர்லாந்தில் வசித்து வருகின்றார். நீதி மன்றத்தில் இவர் வாதிடுகையில்  குர்ஆன், பைபிள் இரண்டும் தீய சக்தியான சாத்தானின்  இரு கண்கள் மாதிரி, இந்நூல்களை குழந்தைகள் படிப்பதை தாம் விரும்பவில்லை  என்று கூறி இருக்கின்றார்.
மத மோதல்களுக்கு இடங் கொடாத சுவிஸ்சில் இவர்கள் குற்றவாளி என்று அறியப்பட்டால் நாடு கடத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
.