என்னை தொட்டவர்கள் !

19 நவம்பர், 2010

கார்கில் போர் : உண்மையை வெளியிட்டு பாக்.பரபரப்பு

இஸ்லாமாபாத் : கார்கில் போரில் தங்களுக்கு நேரடி தொடர்பு இல்லை என்று கூறிவந்த பாகிஸ்தான் ராணுவம், போர் முடிவடைந்து 11 ஆண்டுகள் கழித்து, தற்போது போரில் மரணமடைந்த ராணுவ வீரர்களின் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1999ம் ஆண்டு, இந்தியா - பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் இமயமலையில் அமைந்துள்ள கார்கில் பனி சிகரத்தை ஆக்கிரமிக்கும் நோக்குடன் பாகிஸ்தான் போர் தொடுத்தது. ஆனால், இந்திய ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையால், பாகிஸ்தானின் முயற்சி தோல்வியடைந்தது. போரில் படுதோல்வியடைந்த பாகிஸ்தான் ராணுவம், தனதுதோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல், கார்கில் போரில் ராணுவத்தினர் ஈடுபடவில்லை என்றும், துணை ராணுவப்படைகள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் கட்டுக் கதை கூறி வந்தது.

இந்நிலையில், முன்னாள் ராணுவ தளபதியும், பாகிஸ்தான் அதிபருமான பர்வேஸ் முஷாரப், 2006ம் ஆண்டு தான் எழுதிய, "இன் தி லைன் ஆப் பயர்' என்ற சுயசரிதை புத்தகத்தில், கார்கில் போரில் ராணுவ வீரர்கள் நேரடியாக ஈடுபட்டதை அம்பலப்படுத்தினார். அதில், 357 ராணுவ வீரர்கள் மரணமடைந்ததாகவும், 660 பேர் காயமடைந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், கார்கில் போர் முடிந்து 11 ஆண்டுகள் முடிவடைந்து விட்டநிலையில், போரில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டதை, அந்நாட்டு ராணுவம் முதன் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. தனது இணையதளத்தில், பட்டாலிக் - கார்கில் பகுதியில் போரினால் மரண மடைந்த ராணுவ அதிகாரிகள் மற்றும் 453 ராணுவ வீரர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. அதில், மரணமடைந்த வீரர்களின் பெயர்கள், அவர்கள் மரணத்திற்கான காரணம், எந்த இடத்தில் மரணமடைந்தனர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. கார்கில் போருக்கு, "ஆபரேசன் கோ -இ- பைமா' என்று பெயரிட்டு போர் தொடுத்ததையும் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது. இந்நிலையில், கார்கில் போரில் 3,000 பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்ததாகவும், 200 பேர் பனிப்புயலில் சிக்கி மண்ணில் புதைந்து விட்டதாகவும் அந்நாட்டு எதிர்க்கட்சி கூறி வருகிறது, என்பது குறிப்பிடத்தக்க