என்னை தொட்டவர்கள் !

14 நவம்பர், 2010

கொலைகாரன் புஷ் ஒப்புதல் வாக்குமூலம் !

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் தன் நினைவுகளை, அனுபவங்களை "டிஸிஷன் பாயிண்ட்ஸ்' என்ற தலைப்பில் ஒரு சுயசரிதை நூலாக எழுதியிருக்கிறார். இந்நேரம் அந்த நூல் வெளியாகியிருக்கும்.
அந்த நூலில் அவர் இதுவரை வெளியிடாத இரண்டு விஷயங்களை வெளியிட்டிருக்கிறார்.
ஒன்று, ஈராக் போர் தொடர்பானது. ஈராக் மீது அமெரிக்கா தொடுத்த போரில் தான் பல தவறுகள் செய்துவிட்டதாக புஷ் ஒப்புக் கொள்கிறார். அந்தப் போருக்கு மிக முக்கிய காரணமே, ஈராக்கில் மனிதகுல அழிவு ஆயுதங்கள் பெருமளவில் இருப்பதாக உளவுத் துறை மூலம் கிடைத்த தகவல்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த ஆயுதங்களைக் கண்டுபிடித்து அழித்து உலக மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்றுதான் அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படையெடுத்துச் சென்ற பிறகு அங்கே அப்படிப்பட்ட ஆயுதங்கள் எதையும் அமெரிக்கத் துருப்புகளால் கைப்பற்ற முடியவில்லை என்பதை தன் நூலில் புஷ் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
நான் மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு கப்பலின் கேப்டன் போல உணர்ந்தேன். அங்கே ஆயுதங்கள் இல்லை என்று உறுதி செய்யப்பட்டபோது தவறு செய்துவிட்டதாக என் மனம் வலித்தது என்று புஷ் எழுதியுள்ளார்.
இன்னொரு விஷயம். செப்டம்பர் 11 இல் இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதில் பின்னணி மூளையாகக் கருதப்பட்ட கலீத் ஷேக் முகமதை எப்படி விசாரிக்க வேண்டும் என்பது பற்றியது. விசாரிக்கும் முறையில் பல வகைகள் உண்டு. அவற்றில் வாட்டர் போர்டிஸ் என்பது ஒரு முறை. யாரை விசாரிக்கிறார்களோ அந்த ஆளை ஒரு பலகையில் கட்டி வைத்து முகத்தில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து விசாரிப்பது. பதில் சொல்லத் தயங்கினால் அல்லது தவறினால் மீண்டும் முகத்தில் தண்ணீர் பாயும். "கலீத்தை அப்படி விசாரிக்கலாமா, இது சற்று சர்ச்சைக்குரிய வன்முறை கலந்த முறையாயிற்றே என்று அமெரிக்க சி.ஐ.ஏ. அதிகாரிகள் கேட்டபோது நான் பச்சை கொடி காட்டினேன்' என்று அந்தப் புத்தகத்தில் புஷ் ஒப்புக் கொண்டிருக்கிறார்.