என்னை தொட்டவர்கள் !

18 மே, 2010

வீரசோழன் மணல் குவாரி முற்றுகை: ஐநூறு பேர் கைது !!

இன்று வீரசோழன் நகரில் சட்டத்துக்கு புறம்பாக மணல் அல்லும் மணல் குவாரியை மூட கோரி மாபெரும் முற்றுகை போராட்டம் நடை பெற்றது இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராம சாமீ அவர்களும் இஸ்லாமிய உறவின் முறை டிரஸ்ட் போர்டு தலைவர் காஜா முஹைதீன் , ஊராட்சி மன்ற தலைவர் முஹம்மது ரபிக் , முன்னாள் தலைவர் எஸ் .காதர் முஹைதீன் போன்றோர் கலந்து கொண்டு மணல் குவாரியை எதிர்த்து பேசினார்கள் . மணல் அள்ள தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் வருகின்றன இதனால் வீரசோழன் முதல் விளக்கு வரை ஆறு கிலோமீட்டர் ரோடு மிகவும் மோசமாகிப்போனது . முற்றுகை போராட்டம் குவாரி வரை செல்ல போலீஸ் அனுமதி மறுத்ததால், அரபி கல்லுரி முன்பு தடுக்க பட்டு பெண்கள் உள்பட ஐநூறு பேர் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர். இந்த போராட்டதுக்கு சி பி ஐ கட்சி முக்கிய பங்கு வகித்தால் கட்சி பொது செயலாளர் தா .பாண்டியன் கைதானவர் அனைவரையும் விடுதலை செய்ய கோரிக்கை விடுத்தார் . அனைவரும் மாலை விடுதலை செய்யப்பட்டனர் .

4 மே, 2010

மைசூர் சிங்கம் திப்பு சுல்தான் (ரஹ்)!

சுதந்திர இந்தியாவின் ஒவொரு குடிமகனும் மறக் முடியாத மாவீரன் திப்பு சுல்தான் நினைவு தினம்ன்று. வெள்ளையனுக்கு சிம்ம சொப்பனமான இவரின் போர் முறை முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும் அந்த முறை எதிரியையும் வியக்க வைத்தது,இவர் காலத்தில் எல்லா சமையதினரையும் மதிக்கும் மன்னராக திகழ்ந்தார்.இவர் காலத்தில் தான் போரில் ராகெட் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டது. சில துரோகிகளால் காட்டி கொடுக்கப்பட்டு ஷஹீதானார் என்பது அனைவரும் அறிந்தது .இந்த மாவீரனின் தலைமுறை வழி உறவினர்கள் இன்றும் கல்கத்தாவில் டீ கடை நடத்துகிறார்கள், ரிக்க்ஷா இழுக்கின்றார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை!! மாவீரன் திப்பு சுல்தான் இறந்தும் வாழ்கின்றார்! இவர்களோ இல்லாமல் வாழ்கிறார்கள்!! எல்லாம் வல்ல அல்லாஹ் இவர்களின் வறுமையை போக்கவேண்டும் வாழ்வாதாரங்கள் சிறக்க கிருபை செய் வேண்டும் (இன்ஷா அல்லாஹ்)