என்னை தொட்டவர்கள் !

14 ஏப்ரல், 2010

(மு)பாரக் ஒபாமா!

அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு ஹிரோஷிமா,நாகஷாஹி இரட்டை நகரங்கள் அமெரிக்க அணு குண்டால் நாசமாகி போனது உலகமே அறியும், அதன் தாக்கம் இன்றும் இருப்பதாக அறிவியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள் என்பது வரலாறு நவூதுபில்லாஹ் .சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா உலகின் நாற்பத்தி ஏழு நாட்டின் அதிபர்களை அழைத்து அணு ஆயுத பாதுகாப்பு மாநாடு ஒன்றை நடத்தினார், மாநாட்டின் முக்கிய அம்சமாக அணு ஆயுதம் அதிகமாக வைத்து இருக்கும் அமெரிக்காவும் , ரஷ்யாவும் அணுஆயுதங்களை குறைப்பதாக ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியது. இங்கிலாந்தும்,பிராசும் நாட்டின் பாதுகாப்பு கருதி மறுத்துவிட்டன! அவர்களிடம் அணு ஆயுதம் அதிகம் இல்லை என்பதால் அது ஒரு குறையாக தெரியவில்லை.அந்த காலத்தில் அணு ஆயுதம் பற்றி கவலை பட்டவர்கள் ராஜாஜியும், காந்தியும் தான் அந்த வரிசையில் ஒபாமாவும் இடம்பெறுவதால் அவரை நாம் பாராட்டாமல் இருக்கமுடியாது.