என்னை தொட்டவர்கள் !

11 ஜூன், 2011

இந்தியா எதிரி அல்ல : நவாஸ் ஷெரீப்



இந்தியாவை தனது மிகப் பெரிய எதிரிநாடாகக் கருதுவதை பாகிஸ்தான் கைவிட வேண்டும் என்று பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என்.,' கட்சியின் தலைவரும் பாக்., முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் சிந்து மாகாணத்தின் தென் பகுதியில், மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அப்போது கராச்சியில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் ஏதுவாக, இந்தியாவுடனான தனது உறவை பாகிஸ்தான் மறு மதிப்பீடு செய்ய வேண்டும். அது வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் ஏதுவாக அமையும். அதற்கு முதலில் இந்தியாவை, தனது மிகப் பெரிய எதிரிநாடாகக் கருதி மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் கைவிட வேண்டும்.

நான் 1990களில் பிரதமராக இருந்த போது, பாக்., ராணுவத்தின் அதிகாரத்தை கட்டுப்படுத்தாமல் விட்டு விட்டேன்.மற்ற ஜனநாயக நாடுகளில் இருப்பதைப் போல், ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ.,க்கான பட்ஜெட்டை பாக்., பார்லிமென்ட்டில் தாக்கல் செய்து விவாதம் நடத்த வேண்டும். இவ்வாறு நவாஸ் ஷெரீப் தெரிவித்தார்.