என்னை தொட்டவர்கள் !

3 ஜூலை, 2012

'வாழ்நாளிலேயே' இல்லாத அளவுக்கு மோசமாக குறைந்த ரூபாயின் மதிப்பு!


டெல்லி: ரூபாயின் மதிப்பு மிக மோசமான முறையில் குறைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு, ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 56.54 என்று எகிறியுள்ளது.
இதற்கு முன்பு கடந்த மே 21ம் தேதி ரூபாயின் மதிப்பு 56.50 ஆக இருந்தது. கச்சா எண்ணைய் ஏற்றுமதியாளர்களிடையே டாலருக்கு கிராக்கி அதிகரித்துள்ளதே இதற்கு முக்கியக் காரணம்.
ரூபாயின் மதிப்பு வெகுவாக குறைந்து வருவதால் இந்திய ரிசர்வ் வங்கி அவசர கதியில் செயல்பட்டு ரூபாயைக் காப்பாற்ற நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று தெரிகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு வெளிநாட்டு நிதிகள் பெருமளவில் வந்ததால், ரூபாயின் மதிப்பு பெருமளவில் அடி வாங்காமல் தப்பியது. ஆனால் ஏப்ரல், மே மாதத்தில் அன்னிய முதலீடுகள் குறைந்ததாலும், நிதி வரவு இறங்கியதாலும் தற்போது ரூபாயின் மதிப்பு கிடுகிடுவென சரிந்து கொண்டிருக்கிறது.
தொடர்ந்து இந்த நிலை நீடிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். அடுத்த சில நாட்களில் இது மேலும் மோசமாகி ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 57 ஆக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.