என்னை தொட்டவர்கள் !

23 ஜனவரி, 2011

பாக்கிஸ்தான் கவர்னர் ஏன் கொல்லப்பட்டார் ?!


பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநில ஆளுநர் தன் மெய்காப்பாளர்களில் ஒருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டது அந்த நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலுமே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சல்மான் தஸீர் என்ற அந்த ஆளுநரின் வாழ்க்கை ஒரு கம்பீரமான வாழ்க்கை. மிகப் பரந்த நோக்கம் கொண்டவர்.


இஸ்லாமியராக இருந்தாலும் கட்டுப் பெட்டித்தனமோ, மதத் தீவிரவாதமோ தன்னை அண்டாமல் பார்த்துக் கொண்டவர். அவரைப்போல வெளிப்படையான வாழ்க்கையும் கருத்துகளை வெளியிடும் துணிவும் கொண்ட வி.வி.ஐ.பி. பாகிஸ்தானில் வேறு யாரும் உண்டா என்பது கேள்விக்குறி. நவாஸ் ஷெரீஃபின் பள்ளித் தோழர். பூட்டோவின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியவர்.


மதத் துவேஷம், தெய்வநிந்தனை இவையெல்லாம் தவறு என்று சொல்லும் சட்டம் ஒன்று பாகிஸ்தானில் உண்டு. அதை மீறினால் தண்டனைதான். இந்தச் சட்டம் சல்மான் தஸீருக்கு உடன்பாடில்லை. தனிமனித சுதந்திரத்துக்குப் பெரும் ஆதரவாளராக அவர் திகழ்ந்தார்.

தன் தனிமனித பழக்க வழக்கங்களுக்குத் தடையாக எது வந்தாலும் அதை உடைத்தார்.


வெளிப்படையாக மது அருந்தினார். சென்ற வருடம் ஜனவரியில் அவர் மகனுக்குத் திருமணம் நடந்தபோது அவர் வீட்டில் மது ஆறாக ஓடியது. அவர் ஆளுநர் மாளிகைக்குக் குடியேறவில்லை. என் வீடே போதும். அந்த மாளிகை எனக்கு ஆடம்பரம் என்று சொல்லிவிட்டார்.

அழகான தோற்றம் கொண்டவர். பெண்களுக்கு அவர் மீது ஓர் "இது' இருந்து வந்தது.


தன் டுவிட்டரில் இந்தியாவை அடிக்கடி கிண்டல் செய்து எழுதுவார். 2010 டிசம்பர் 16 ஆம் தேதி அவர் எழுதிய சில வரிகள்: "தன் நாட்டுக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டுத் தலைவர்களிடமிருந்து (அந்த நாடுகளிடமிருந்து) ஆயுதம் வாங்குவது... தொடர்ந்து பாகிஸ்தானையும் பயங்கரவாதத்தையும் இணைத்து அறிக்கைவிடச் சொல்வது.. இதுதான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை'