என்னை தொட்டவர்கள் !

23 மார்ச், 2011

ஒரு தொலை நோக்கு ஆய்வு:மக்கள்தொடர்புதுறை!

                                                        கலீல் , வீரசோழன் 


   
குடி மகன்களை பெருக்கி, இலவசம் பெற்ற சோம்பேறிகளை உருவாக்கி தமிழகத்தை கடன் எனும் கடலில் தள்ளி படு கொலை செய்த சுயநல குடும்ப ஆட்சியின் ஐந்தாண்டு காலம் நிறைவு பெறுகிறது .
இன்னும் வரும் ஆண்டில் என்ன செய்ய போகிறோம் என்பதையும் சொல்லிவிட்டார்கள். அதற்க்கு பணம் எங்கு இருந்து வரும் என்று மக்கள் கேட்கவில்லையே ஏன்? மக்களிடம் தொலைநோக்கு சிந்தனை இல்லை என்பதுதான்! நலத்திட்டம்  ஒன்று அறிவிக்கபட்டால், அந்த திட்டம் மக்களை சென்றடையும் போது, மக்கள் அத்திட்டத்தால் நலன் பெற்றார்களா? அல்லது தகுதி இருந்தும் ஏமாற்றபட்டார்களாஇன்னும் அலைக்கழிக்க பட்டநிலையில் அத்திட்டத்தை பெற்றார்களா? என்பதை மக்களே அறிவார்கள். எனவே அத்திட்டத்தின் வெற்றி தோல்வியை மக்களே நிர்ணயம் செய்ய தகுதி பெற்றவர்கள், ஆனால் ஆட்சியாளர்கள் நாங்கள் எனவெல்லாம் செய்தோம் தெரியுமா? என்று தனது சொந்த பணத்தை செலவு செய்தது போல பேசுவது வேடிக்கையாக இருக்கிறது,கேட்டுகொண்டு இருக்கும் மக்களை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. ஒரு துறைய இரண்டாக பிரித்து  இரண்டு அமைச்சர்களை நியமித்தால் போதாது, இரண்டு பேர் என்ன செய்தார்கள் என்பதே முக்கியம். இன்றைய நிலையில் என்னுடைய கருத்து முதல்வர் கருணாநிதிக்கு ஒரு வருத்தம் இருக்கிறது! என்ன தெரியுமா? ஆண்டு முடிந்த ஆட்சியில் திரைபட வளர்ச்சி துறை ஒன்றை உருவாக்கி அதற்க்கு ஒரு நடிகர் அமைச்சரை போடவில்லையே என்பதுதான். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதுவும் நடக்கும் .மக்கள் பிரதிநிதியாக ஒரு நிருபர் முதல்வரிடம், வெங்காயம் விலை ஏறுகிறதே என்று கேட்க, அதற்க்கு அவர் பெரியாரிடம் கேளுங்கள் என்று பொறுப்பற்ற பதிலை சொன்னார்! அந்த நிருபர் வாயாடைத்து போனார். அந்த அப்பாவி நிருபருக்காக முதல்வரிடம் நான் கேட்கிறேன் யார் அந்த  பெரியார்? எனக்கு தெரிந்த வரை மண்ணுக்குள் சென்ற பெரியார் ராமசாமி , முதுகெலும்பில்லாத பிரதமர் என்று ஜெயலலிதா சொன்ன மன்மோகன்சிங், மூன்றவதாக தமிழகத்தை ஆளும் கருணாநிதி இதில் நிருபர் சரியான நபரிடம்தானே கேட்டார்? பதில் சொல்லுங்கள் இல்லையென்றால் வெங்காய விலையை கட்டு படுத்த இயலவில்லை என்று துணிந்து ஒப்புக்கொள்ளுங்கள், அதை  வரவேற்கிறேன்.தி.மு.க வை இவ்வளவு தாக்கியதால் நான் அ.தி.மு.க. வை ஆதரிக்கின்றேனா?என்று நீங்கள் கேட்கலாம் நிச்சயமாக இல்லை. ஐந்தாண்டு காலம் தி.மு.க. ஆட்சியை பார்த்தேன் அதனால் அதை அதிகம் விமர்சிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நான் எந்த கட்சியையும் ஆதரிக்கவில்லை, அதே நேரத்தில் புதிய ஆட்சியாளர்களுக்கு ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் வைக்கிறேன், அதுதான் மக்கள் தொடர்பு துறை என்ற தொலை நோக்கு திட்டம்.இப்படி ஒரு துறையை நிறுவி அதற்க்கு நிர்வாகவியல் படித்த ஒருவரை அமைச்சராக்க வேண்டும். இந்த துறையின் நோக்கம் மக்கள் குறை தீர்ப்பு என்பதுதான் . இந்த துறைக்கு அனைத்து துறையையும் கட்டு படுத்தும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும், எந்த பிரச்சனையும், எந்த நேரமும் மக்கள் இங்கு தெரிவிக்கலாம் என்ற சுதந்திரம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும், தமிழகமெங்கும் இந்த துறையின் பிரதிநிதியாக மாவட்ட  ஆட்சியர்களையே நியமிக்க வேண்டும் என்பதோடு, புகாரை பெற்ற ஐந்து வேலை நாட்களில் மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற உத்திரவாதத்தையும் கொடுக்கவேண்டும்.இந்த முறை தற்போது மாவட்ட ஆட்ச்யர் மூலமாக நடைமுறையில் உள்ளதே எனலாம்! உண்மைதான் அது போலியான நிர்வாகம் , காரணம் ஒரு பிரச்சனைக்காக இரண்டு முறை மனு கொடுத்துஅந்த கோரிக்கை அறுபது நாளில் தீர்க்கப்பட்டது எனது சொந்த அனுபவத்தில். இப்படி மனுவை தூக்கி சாமானியன் அலைந்தால் அவனது செருப்பும் தேயும், ஆயுளும் தேயும். சரி ஆன்லயனில்  புகார் பதிவு செய்யலாம் என்றால், புகார் பதிவு எண் கிடைக்கவில்லை! அப்படியன்றால் என்னுடைய புகார் எற்றுகொள்ளபட்டாத? இல்லையா ? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.எனவே தான் நான் மேற்கூறிய  திட்டம் வேண்டும் என்கிறேன் . இத்துறையால் லஞ்சம் ஒழியும், அதிகார துஷ்பிரயோகம் நீங்கும், அரசு அதிகாரிகள் சுயநலமில்லாமல் வேலை செய்வார்கள்.தமிழகம் தன்னிறைவடையும், அன்று மக்களே இலவசங்களை வெறுப்பார்கள்,வளமான தமிழகம் காண்போம் தேசமே தமிழகத்தை திரும்பிபார்க்கும் !!!