என்னை தொட்டவர்கள் !

3 நவம்பர், 2011

கனிமொழி ஜாமீன் மனு சொதப்பியது யாரால்?


புதுடில்லி, இந்தியா: அனைத்து மட்டங்களிலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட கனிமொழி ஜாமீன் மனு இன்று (வியாழக்கிழமை) சற்று நேரத்துக்கு முன் நிராகரிக்கப்பட்டது. மனு நிராகரிக்கப்பட்டதுகூட பெரிய விஷயமல்ல, மனு நிராகரிக்கப்பட்ட காரணங்கள் என்று நீதிபதி தெரிவித்துள்ள காரணங்கள், இந்த வழக்கில் கனிமொழிக்கு எதிரான அஸ்திரங்களாக பதிவாகியுள்ளன.
இந்தக் காரணங்கள் கனிமொழி கேஸ் பைலில் பதிவாகியுள்ளதில் என்ன வில்லங்கம் உள்ளது? இருந்து பாருங்கள், பின்னாட்களில் கனிமொழியை இந்தக் குற்றச்சாட்டிலிருந்து வெளியே கொண்டுவர, இன்றைய பதிவு தடையாக இருக்கப் போகின்றன. நீதிபதியின் வேர்டிங், கனிமொழி மீதான குற்றச்சாட்டை முன்கூட்டியே கோர்ட் ஏற்றுக் கொள்ளும் ரகத்தில் உள்ளது!
இதற்கு, ஜாமீன் மனு செய்யாமலேயே இருந்திருக்கலாம்!
“கனிமொழியின் ஜாமீன் மனு, மூன்று காரணங்களின் அடிப்படையில் நிராகரிக்கப்படுகின்றது” என்று கூறிய சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, “First of all, the crime committed was a deliberate offence; secondly, an economic offence and finally, very serious in nature.” என்று கூறியதை தமிழ்ப்படுத்தி அதன் ஃபுளோவை குறைக்க வேண்டாம்.
அப்படிக்கூறிய நீதிபதி, “குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் பொதுப் பணத்தை மிகக் கவனமான முறையில் தனது சொந்தப் பாவனைக்காக கவர்ந்து கொண்டுள்ளார்” என்றார்.
வழக்கே முடியுமுன் மேலே குறிப்பிட்ட வாக்கியம், கனிமொழியின் ரிக்கார்ட்களில் பதிவாகப் போகின்றது!
கனிமொழி ஜாமீன் மனுவை நிராகரித்து நீதிபதி வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்ட மற்றைய அதிரடி வாக்கியங்களையும் பாருங்கள்:
• “தற்போது இந்த கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பு ‘எந்தவொரு வெளி அழுத்தம்’ காரணமாகவும் கூறப்படவில்லை. வழக்கிலுள்ள உண்மைகளையும், நிகழ்வுகளையும் மனதில் வைத்தே ஜாமீன் நிராகரிக்கப்படுகின்றது”
• “இவருக்கு ஜாமீன் கொடுப்பதை சி.பி.ஐ. எதிர்க்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் நீதியின் கண்களுக்கு முன், சி.பி.ஐ. மறுக்கவில்லை என்பதற்கு எந்த மதிப்பும் கொடுக்க முடியாது”
• “கனிமொழி சமூகத்தின் உயர்மட்டப் பெண்மணி என்பதாலோ, அவர் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதாலோ சட்டத்தின் கண்களுக்கு அவர் வேறு விதமாகத் தெரிவதில்லை. அவர் ஒரு பெண் என்பதால் இதில் டிஸ்கிரிமினேஷன் ஏதுமில்லை”
• “குற்றம் சாட்டவர்களுக்கு (கனிமொழி) உள்ள உரிமைகளை இந்த கோர்ட் மறுக்கவில்லை. ஆனால் அதேநேரத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு (கையாடப்பட்டது பொதுப்பணம் என்பதால், நீங்கள்.. நாங்கள்.. மக்கள்!) உள்ள உரிமை, கனிமொழிக்கு உள்ள உரிமைக்கு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல!
கடைசி வாக்கியத்தைச் சொன்னதற்காக,  நீதிபதி ஓ.பி.சைனிக்கு மரியாதைக்குரிய ஒரு சல்யூட்!