என்னை தொட்டவர்கள் !

12 ஜூன், 2010

260 போலி மருத்துவர்கள் கைது!

தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த இரு நாள்களாக நடத்தப்பட்ட சோதனையை அடுத்து 260 க்கும் அதிகமான போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

முறையான மருத்துவக் கல்வி இன்றி, தாங்கள் மருத்துவர்கள் என்று கூறி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர்களைக் கண்டறிந்து களையும் பணி தமிழகம் முழுவதும் முடுக்கிவிடப்பட்டது.

வெள்ளிக் கிழமையன்று சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற சோதனைகளின் போது இத்தகைய போலி மருத்துவர்கள் 171 பேர் கைது செய்யப்பட்டனர்.

சனிக்கிழமையன்று இரண்டாவது நாளாக நடைபெற்ற சோதனையில், சென்னை புறநகரில் 2 பேர், திருவள்ளூர் மாவட்டம் 5 பேர், தேனி மாவட்டம் 25 பேர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் 31 பேர், கிருஷ்ணகிரி, நாமக்கல் 11 பேர், வேலூர், திருவண்ணாமலை 8 பேர், திருநெல்வேலி 2 பேர், ஈரோடு 6 பேர், திருவாரூர் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆனதை அடுத்து, இதுவரை கைது செய்யப்பட்ட போலி மருத்துவர்களின் எண்ணிக்கை 266ஆக உயர்ந்துள்ளது.