என்னை தொட்டவர்கள் !

5 ஜூன், 2010

காய்தே மில்லத் பிறந்த நாள் !


இன்று தனக்காக இல்லாமல் பிறர்க்காக வாழ்ந்த அற்புத தலைவர் சமுதாய வழிகாட்டி இஸ்மாயில் சாஹிப் பிறந்த நாள் அவரை பற்றி சில நினைவுகள்
  1. காந்தி அழைப்பின்பேரில் சுதந்திர போராட்டத்துக்காக கல்லூரி படிப்பை பாதியில் விட்டவர் .அனால் ஆங்கிலத்தில் வல்லவர் .
  2. ஹமீதா பீவியை மணம் முடித்தார்
  3. பெரியார் , அண்ணாதுரை போன்றோருடன் நட்பு பாராட்டினார் .
  4. முஸ்லிம் லீக்கை கலைக்க சொன்ன நேருவின் கோரிக்கையை நிராகரித்தார் , அதே நேரத்தில் நேருவுடன் நட்புடன் இருந்தார் .
  5. முஸ்லிம் லீக் பாகிஸ்தானுக்கு பிரிந்த போது லீக்கின் பொது நிதி யில் பங்கு தொகை பதினேழு லட்சத்தை ஜின்னாஹ் தந்த பொது அதை வாங்க மறுத்தார் .
  6. முஸ்லிம் , உரிமை குரல் போன்ற பத்திரிக்கைகள் நடத்தினார் .
  7. குடியாத்தம் இடை தேர்தலில் காமராஜுக்கு ஆதரவு அளித்தார் .
  8. நாத்திக பிரசாரம் வேண்டாம் என்று கூறி , தி .மு .க வுடன் கூட்டணி
  9. சென்னையில் உள்ள தனது வீட்டுக்கு தயா மனசில் (கருணை இல்லம் )என்று பெயர் வைத்தார் .
  10. மிகப்பெரிய அரசியல் வாதியான இவருக்கு சொந்தமாக கார் இல்லை , இலவசமாக வந்ததை வாங்க மறுத்தார் .
  11. கேரளா மாநிலம் மஜ்சேரியில் வேட்பு மனுவை தபாலில் அனுப்பி ,வோட்டு கேட்காமல் மூன்று முறை வெற்றி பெற்றவர் .
  12. இலவச ரயில் பயணம் இருந்த போதும் துணைக்கு யாரையும் அழைத்து செல்வதில்லை , பல முறை டெல்லி சென்றிருக்கிறார் ஆனால் ஒருமுறைகூட தனது மனைவி டெல்லியை பார்த்ததில்லை .
  13. பெண்கல்வியை ஆதரித்த இவர் தனது பேத்தியை டாக்டராக்கினார்.
  14. மிகப்பெரிய அரசியல்வாதி சாமானியனை போல் வாழ்ந்தார் .
  15. நாகூர் ஹனிபா இவரின் நண்பர் , எங்கு சென்றாலும் உடன் செல்வார் .
  16. முரசொலி மாறன் மகனுக்கு தயாநிதி மாறன் என்று இவரே பெயர் வைத்தார் .
  17. பாராளுமன்றத்தில் முஸ்லிம்களுக்காக இவர் பேசாத விசயங்களே இல்லை .
  18. பச்சை தமிழன் இவர் தனது மகனுக்கு உர்து குடும்பத்தில் பெண் எடுத்தார் . எளிய முறையில் திருமணமும் செய்து வைத்தார் .
  19. அரசியலை சுய லாபத்துக்கு பயன்படுத்தாத அற்புத தலைவர் என்று பத்திரிக்கையாளர் சோ பாராட்டினார் .
  20. சாலைகள் ,பாலம், கல்லூரிகள், மணிமண்டபம் போன்றவைகளுக்கு இவரின் பெயர் வைத்து மகிழ்ந்தார் கருணாநிதி ,நூற்றாண்டு விழாவை மிக சிறப்பாக கொண்டாடினார் ஜெயலலிதா , சட்டமன்றத்தில் சிலை வைத்தார் எம் .ஜி .ஆர் , காய்தே மில்லத் தபால் தலை வெளியிட கோரிக்கை வைத்து வெற்றியும் பெற்றார் வைகோ ,தனது கட்சியில் காய்தே மில்லத் விருது வழங்கி பெருமை படுகிறார் திருமாவளவன்.
  21. இந்த நல்ல மனிதர் வபாத்தாகும் போது இவரின் வங்கி கணக்கில் பணம் இல்லை .
  22. காய்தே மில்லத் ஜிந்தாபாத் !!!